கம்பராமாயணம் 3419 · ஆரணிய 8.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இருப்பெனேல் எரியிடை இவர் இறப்பர் - (சீதை கூறியவாறு போகாமல்) இங்கிருப்பேனாயின் தீயிலே பிராட்டியார் வீழ்ந்து சாவார்; பொருப்பு அனையானிடைப் போவெனே எனில் - மலை போன்ற இராமனிடம் செல்வேனாயின்; அருப்பம் இல் கேடு வந்து அடையும் - காவலில்லாத தீங்கு பிராட்டிக்கு வந்து சேரும்; ஆர்உயிர் விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் - அரிய உயிர் மீது ஆசையுடைய எனக்கு எச் செயல் செய்வது என எண்ணி ஏங்கினான். ஆல் - அசை.
இராமனுக்கு மலை உவமை ஆகிறது. இதனை அருப்பம் - அற்பம் எனவுமாம் தடையுமாம். ஆருயிர் விருப்பனேன் என்பதால் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணும் எண்ணம் குறிப்பாகப் புலப்படுகிறது. இதனால் இலக்குவன் தன்னையே வெறுக்கும் மனநிலை உள்ளவன் என்பது தெரிகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If I stay, she will die in the fire;
- if I go to him who is like a mountain,
- no small harm will come to her; I who cling to my dear life,
- what am I to do?' and he sobbed.
What the poem says
Ilakkuvaṉ is trapped. If he stays, Cītai will burn herself to death. If he goes to Irāmaṉ, she will be left unguarded and great harm will come to her.
He reproaches himself for clinging to his own life, a hint that he is ready to end it. In his despair he even turns against himself.