கம்பராமாயணம் 3430 · ஆரணிய 8.28

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புன மயில் சாயலின் எழிலில் , பூநறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின்
இனம் எனக் களித்துளது என்பது என் ? அவன்
மனம் எனக் களித்தது , கண்ணின் மாலையே .

பொருள் · Meaning in Tamil

கண்ணின் மாலை - சீதையைக் கண்ட இராவணனின் கண்களாகிய வரிசை; புன மயில் சாயல் தன் எழிலில் - காட்டில் உலவும் மயிலின் சாயல் கொண்ட மேனி அழகில்; பூ நறைச் சுனை மடுத்து உண்டு இசை முரலும் - மலர்களின் தேன் நிறைந்த சுனையில் சென்று அத்தேனைக் குடித்துப் பண் பாடும்; தும்பியின் இனம் எனக் களித்துளது என்பது என் - வண்டுகளின் கூட்டம் போல மகிழ்ந்து மயங்கியது என்று கூறுவதில் என்ன பயன்?; அவன் மனம் எனக் களித்தது - இராவணனின் மனம் போல மகிழ்ந்தது என்பதே பொருந்தும்.

பூ - தாமரை மலர்கள் எனவும் கூறுவர் இராவணனின் இருபது கண்களும் புறத்தே புலப்படவில்லை. எனினும் கண்ணுக்குப் புலப்படாத அவன் மனம் கொண்ட மகிழ்ச்சியைச் சீதையைக் கண்ணால் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியுடன் ஒப்பிடலாம். பொறிகளை இயக்குவது மனம் என்ற உண்மையும் இங்குப் புலப்படும். சீதையின் அழகு தேனாகவும் இராவணனின் கண்கள் அத் தேனைப் பருகி மகிழும் வண்டாகவும் பொருந்தி நிற்கின்றன. சுமந்திரன் இராமனைக் கண்டு மகிழ்ந்த நிலையைத் 'தன் கண்ணும் உள்ளமும் வண்டு எனக் களிப்புறக் கண்டான் (1302) எனவும் கூறப் பெற்றதை இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.

மயில் சாயல் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஏ - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the beauty of her who had the grace of a wild peacock,
  2. why say that they rejoiced like a swarm of bees that drink
  3. from a pool of flower-honey and hum their songs? Like his
  4. mind, so his row of eyes rejoiced.

What the poem says

Irāvaṇaṉ's many eyes drink in Cītai's beauty. The poet says it is not enough to compare them to bees humming as they drink honey from a pool of flowers.

They delight as much as his mind does, and the mind is what drives all the senses. Her beauty is the honey, and his eyes are the bees.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṉa mayil cāyaltaṉ eḻilil, pū naṟaic
cuṉai maṭuttu uṇṭu icai muralum tumpiyiṉ
iṉam eṉak kaḷittuḷatu eṉpatu eṉ? avaṉ
maṉam eṉak kaḷittatu, kaṇṇiṉ mālaiyē.