கம்பராமாயணம் 3459 · ஆரணிய 8.57

Section ஆரணிய காண்டம் / 8. சடாயு உயிர் நீத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ''
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1மானவள் உரைத்தலோடும் , '' மானிடர் அரக்கர் தம்மை ,
மீன் என மிளிரும் கண்ணாய் ! வேர் அற வெல்வர் என்னின் ,
யானையின் இனம் அத்து ஐ எல்லாம் இள முயல் கொல்லும் ; பின்னும் ,
கூன் உகிர் மடங்கல் ஏற்றைக் குருளை மான் கொல்லும் '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

மானவள் உரைத்தலோடும் - பெருமை மிக்க சீதை இவ்வாறு கூறியவுடன், (இராவணன்; மீன் என மிளிரும் கண்ணாய் - மீன் போலப் பிறழ்ந்து ஒளிவிடும் கண்ணை உடையவளே!; அரக்கர் தம்மை மானிடர் வேர் அறவெல்வர் என்னின் - இராக்கதர்களை மனிதர் அடி வேரில்லாமல் வெற்றி கொள்வார்கள் என்றால்; யானையின் இனத்தை எல்லாம் இளமுயல் கொல்லும் - யானைக் கூட்டம் அனைத்தையும் இளைய முயல் கொன்று விடும்; இன்னும் கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் - மேலும் வளைந்த நகமுடைய ஆண் சிங்கங்களின் கூட்டத்தை மான் கொன்று விடும் என்று கூறினான்.

மானவன் என்பதன் பெண்பால் மானவள், மான்போன்ற மருண்ட பார்வையுடையவள் என்றுமாம். மிளிர்தல் - ஒளிவிடுதல் யானையை முயல் கொல்லுதலும் சிங்கத்தை மான் கொல்லுதலும் உலகில் நடவாதன. எனவே அரக்கரை மனிதர் கொல்லுதல் நடவாத செயல் ஆகும்.

எனவே, இப்பாடலில் பொய்த்தற் குறிப்பு உளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she of honour said this, he said, 'If men are to defeat the demons
  2. and root them out, you whose eyes flash like fish,
  3. then a young hare will kill whole herds of elephants, and further,
  4. a deer will kill a pride of curved-clawed lions.'

What the poem says

Irāvaṇaṉ scoffs at Cītai's faith. For mere men to wipe out the demons would be like a young hare killing a herd of elephants, or a deer killing a pride of lions.

Such things never happen, he means. The commentary notes the irony: his words will turn out to be false.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉavaḷ uraittalōṭum, '' māṉiṭar arakkartammai,
mīṉ eṉa miḷirum kaṇṇāy! vēr aṟa velvar eṉṉiṉ,
yāṉaiyiṉ iṉattai ellām iḷa muyal kollum; iṉṉum,
kūṉ ukir maṭaṅkal ēṟṟiṉ kuḻuvai māṉ kollum '' eṉṟāṉ.