கம்பராமாயணம் 3474 · ஆரணிய 8.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் - இந்த மண்ணுலகைத் தாங்க நிற்கும் மலையைக் காட்டிலும் ஆற்றல் மிக்க தோளை உடைய இராவணன்; அணங்கினுக்கு அணங்கனாளே - தெய்வப் பெண்ணுக்கு ஒரு தெய்வப் பெண் போன்றவளே!; ஆசை நோய் அகத்துப் பொங்க - காமம் ஆம் வியாதி என் மனத்தில் வளர; உணங்கிய உடம்பினேனுக்கு - வாடிய உடலையுடைய எனக்கு; உயிரினை உதவி - (சாக உள்ள) என் உயிரை (உன் கருணையால்) காப்பாற்றி எனக்களித்து; உம்பர்க் கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும்பதம் கைக்கொள் - மேலுலகிலுள்ள திரண்ட குழை எனும் காதணிகள் பூண்ட தெய்வ மகளிர் எல்லார்க்கும் கிடைப்பதற்கரிய சிறந்த நிலையுடைய பதவியை நீ ஏற்றுக்கொள்; என்னா வணங்கினன் - என்று கூறி வீழ்ந்து வணங்கினான்.
உலகம் தாங்கும் மலை - மேருமலை. அது அச்சுப் போல நின்று உலகைத் தாங்குகிறது என்பது புராண மரபு. அணங்கு - அழகு என்பாருமுளர் அழகெனும் அவையும் ஓர் அழகு பெற்றதே என முன்னர்க் கூறப்பட்டுளது (513). தெய்வ மகளிர்க்கு உன் அழகால் வருத்தத்தை உண்டாக்குபவளே எனவும் கூறுவர் பின்னர் வரும் சுந்தரகாண்டக் காட்சிப் படலத்திலும் சீதையை வேண்டிய இராவணனை முடியின் மீது முகிழ்த்து உயர்கையினன், படியின் மேல் விழுந்தான் பழிபார்க்கலான்' எனக் காட்டுவார் கம்பர் (5182). ஒரு முறை அச்சுறுத்துவதும் மறுமுறை அடி வீழ்ந்து தாழ்வதும் இராவணனின் வெகுளியும் காமமும் மாறிமாறி அவனை அலைக்கழித்து நிற்கும் நிலையைக் காட்டும். கணம் - திரட்சி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who are a goddess even to goddesses! As the sickness of desire surges within me,
- give life to me, whose body is wasting away, and take
- the high station above all the heavenly women with their clustered earrings,'
- so saying, he bowed down, he whose shoulders were mightier than the mountain that holds up the world.
What the poem says
Having threatened her, Irāvaṇaṉ now begs. Cītai is a goddess beyond goddesses, and he is wasting away with desire.
If she saves his life, she shall rank above all the heavenly women. Then he, whose arms are stronger than Mount Mēru that holds up the world, falls at her feet. His swings between threats and grovelling show him torn by anger and lust.