கம்பராமாயணம் 3522 · ஆரணிய 8.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேல் இழந்தான் - தன் முத்தலைச் சூலத்தை (ப் பயன் இல்லாமல்) இழந்த இராவணன்; வேகம்முடன் - மிக விரைவாக; வேறு படை எடா முன் - வேறு படைக் கலத்தை எடுப்பதற்கு முன்பே; மாகம் மறையும் படி - பெரிய வானமும் மறையும் படியாக, நீண்ட வயங்கு மான் தேர்ப்பாகன் - உயர்ந்து விளங்குகின்ற குதிரைகள் பூட்டப் பெற்ற (இராவணனது) தேர்ப்பாகனுடைய; தலையைப் பறித்து - தலையைத் துண்டித்து; படர் கற்பினாள் பால் - (ஆழமாகப்) படர்ந்த கற்பினை உடைய சீதையின் மேல், மோகம் படைத்தான் - காம மயக்கம் கொண்டவன் ஆகிய (இராவணன்); உளைவு எய்த - வருத்தம் அடையும் படி; முகத்து எறிந்தான் - அவனது முகத்தில் (தலையை) வீசி எறிந்தான்.
வேலை வெறுமனே போக்கிய இராவணன் வேறு படை எடாமுன் சடாயு பாய்ந்து தாக்கித் தேர்ப்பாகனது தலையைக் கொய்து அதை அவன் முகத்தில் வீசினான். மாகம் - திசை. மோகம் - காமமயக்கம், உளைவு - வருத்தம். மான் - விலங்கு; ஈண்டுக் குதிரையைக் குறித்தது. வேகம்முடன், மாகம் மறையும் படி - மகர ஒற்று விரித்தல் விகாரத்தால் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swiftly, before he who had lost his spear could take up another weapon,
- the charioteer of the tall, gleaming horse-drawn chariot that hid the sky,
- his head he tore off, and so that he who lusted after the lady of steadfast chastity
- might be stung, he flung it in his face.
What the poem says
With his trident wasted, Irāvaṇaṉ reaches for another weapon, but Caṭāyu is faster. He rips the head off the driver of Irāvaṇaṉ's huge horse-drawn chariot, which seems to blot out the sky, and hurls it into the face of the demon who lusts after the faithful Cītai, to wound and shame him.