கம்பராமாயணம் 3537 · ஆரணிய 8.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல் இயல் - ஒளி பொருந்திய; விசும்பிடை இருந்த - வானுலகத்தில் இருந்த; நேமியாய் - ஆணைச் சக்கரத்தை உடைய தசரத சக்கரவர்த்தியே; சொல்லிய அறநெறி தொடர்ந்த - (நூல்களில்) சொல்லப்பட்ட அறவழியைத் தொடர்ந்து; தோழமை - நண்பனுக்குரிய; நல் இயல் அருங்கடன் கழித்த - நன்மை பொருந்திய அரிய கடனைக் கழித்த; நம்பியைப் புல்லுதியோ - சடாயுவை (வானுலகில்) தழுவிக்கொள்ளுவாயோ?; எனப் பொருமிப் பொங்கினாள் - என்று கூறி விம்மி அழுதாள்.
முன்பே வானடைந்த தசரதச் சக்கரவர்த்தியே! ஒரு நண்பனுக்கு உரிய கடன் கழிக்க வந்து உயிர் விட்ட உன் அருமைத் தோழனை அங்கு நீ தோழமை மகிழ்வோடு அணைத்துக் கொள்வாயா என்று சீதை விம்மி அழுதனள் என்க. எல் - ஒளி. தோழமை நல் இயல் அருங்கடன் - இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788) என்றபடி பிறர் செய்ய விரும்பாத, கடமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O you of the wheel of command, now dwelling in the bright heavens!
- This noble one, who followed the path of Dharma the books teach
- and paid the good and difficult debt of friendship,
- will you embrace him?, she cried, sobbing and overflowing.
What the poem says
Cītai now speaks to Tacarataṉ, Irāmaṉ's late father, the emperor whose wheel of command once ran everywhere and who has gone to heaven. His dear friend Caṭāyu has paid the hard debt that friendship demands and given his life for her; will Tacarataṉ embrace him when he arrives above?
The commentary recalls the Tirukkuṟaḷ's teaching that true friendship is the one that rushes to remove a friend's trouble.