கம்பராமாயணம் 3708 · ஆரணிய 9.81

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
பாட வேறுபாடு · Project Madurai reads
1நெடும் வரை பொடிபட , நிவந்த மா மரம்
ஒடிவு உற , நிலம் மகள் உலைய , ஊங்கு எலாம்
' சடசட ' எனும் ஒலி தழைப்பத் தாக்குமா
முடுகினன் இராமன் , வெம் கால் இன் மும்மையான் .

பொருள் · Meaning in Tamil

இராமன் - இராமன்; நெடுவரை பொடிபட - பெரிய மலைகள் தூளாகவும்; நிவந்த மாமரம் ஒடிவுற - உயர்ந்த பெரிய மரங்கள் ஒடியவும்; நிலமகள் உலைய - நிலமகள் வருந்தவும்; ஊங்கு எலாம் - பக்கங்களில் எல்லாம்; 'சட சட' எனும் ஒலி தழைப்ப - சட சட என்ற ஓசை மிகவும்; வெங்காலின் மும்மையான் - கடுங்காற்றினும் மூன்று மடங்கு வேகத்தோடு; தாக்கவும் முடுகினன் - அயோமுகியைத் தாக்குவதற்காக விரைந்தான்.

இராமன் பெரு மலை பொடிபட, நெடு மரம் ஒடிய, நிலமகள் வருந்த, பக்கங்களில் எல்லாம் சட சட ஒலி எழக் காற்றினும் மூன்றுமடங்கு வேகத்தோடு அயோமுகியைத் தாக்க விரைந்தான். சட சட - இரட்டைக் கிளவி, ஒலி குறித்து வந்தது. வெங்கால் - கடுங்காற்று. முடுகுதல் - விரைதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As tall mountains were ground to dust, great lofty trees
  2. snapped, the earth goddess shuddered, and all around
  3. a crackling 'caṭa caṭa' swelled up, he went to strike;
  4. Irāmaṉ rushed on, with three times the speed of a fierce gale.

What the poem says

Irāmaṉ races toward the sound to attack the demoness, moving three times faster than a storm wind.

In his path mountains are crushed to powder, huge trees snap, the earth itself suffers, and everything around rings with a crackling, crashing noise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṭu varai poṭipaṭa, nivanta mā maram
oṭivuṟa, nilamakaḷ ulaiya, ūṅku elām
' caṭa caṭa ' eṉum oli taḻaippat tākkavum,
muṭukiṉaṉ irāmaṉ, veṅ kāliṉ mummaiyāṉ.