கம்பராமாயணம் 3727 · ஆரணிய 9.100

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
பாட வேறுபாடு · Project Madurai reads
1' அப்பு உடை அலங்கு மீன் அமரும் ஆர்கலி
உப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப , மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ , கொதிக்கும் வானமே ?

பொருள் · Meaning in Tamil

உப்புடை இந்து என்று - அழகு உடைய நிலவு என்று; உதித்த ஊழித் தீ - (வானத்தில் உதித்த) ஊழித் தீயினுடைய; வெப்புடை விரிகதிர் வெதுப்ப - வெப்பம் உடைய விரிந்த கதிர்கள் சுட; மெய் எலாம் - (தன்) உடம்பில் எல்லாம்; அப்புடை அலங்கு மீன் - நீரோட்டம் உடைய விளங்குகிற மீன்கள்; அலர்ந்ததாம் என - விளங்கினதாம் என்பது; கொதிக்கும் வானம் - (இந்து எனும் ஊழித் தீயினால்) கொதிக்கின்ற வானம்; கொப்புளம் பொடித்ததோ - கொப்புளங் கொண்டதோ? எனுமாறு விளங்கியது.

இந்து என்ற ஊழித் தீயினால் வெப்பமடைந்த வானம் கொப்புளம் கொண்டது போல் அதில் மீன்கள் விளங்கின என்றவாறு. அப்பு - நீர். உப்பு - இனிமை, அழகு. இந்து - நிலவு. அலங்குதல் - விளங்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the shining stars in the waters, it seems, have blossomed out,
  2. the doomsday fire that has risen, calling itself the lovely moon,
  3. scorches it with spreading, burning rays, and over all its body
  4. has the boiling sky broken out in blisters?

What the poem says

For the grieving Irāmaṉ even the moon, normally cool and soothing, feels like the fire that consumes the world at the end of an age. He imagines the sky being burned by it, and the stars scattered across it look to him like blisters raised on its skin. The image turns the beauty of a moonlit night into torment, as separation does in Tamil love poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' appuṭai alaṅku mīṉ alarntatām eṉa
uppuṭai intu eṉṟu utitta ūḻit tī
veppuṭai viri katir vetuppa, mey elām
koppuḷam poṭittatō, kotikkum vāṉamē?