கம்பராமாயணம் 3734 · ஆரணிய 10.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இறுதி நாள் உற - உலகங்கள் அழியும் ஊழிக்காலம் வந்து சேர்தலால்; நால் திசைப் பரவையும் - நான்கு திசைகளிலும் உள்ள எல்லாக் கடல்களும்; உலகம் எங்கணும் - உலகம் முழுவதிலும்; காற்று இசைத்து எழ எழுந்து - ஊழிக் காற்று முழங்கிப் பரவி; ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன போல் - எதிர்த்து ஆரவாரத்தோடு உயரமாக வந்து நெருக்குவனபோல; திசை சுற்றிய - எல்லாத் திசைகளிலும் சுழன்று வருகின்ற; கரத்துப் புக்குளார் - (கவந்தனின்) கைகளிடையே இராமலக்குவர் புகுந்தனர்.
ஊழிக் காற்றினால் பொங்கிய எல்லாக் கடல்களும் பரவிச்சுழல்வது போல வேகமாகக் கவந்தனின் கரங்கள் சுழன்று வளைத்தன, வளைத்த கரங்களிடையே இருவரும் சிக்கினர். இது பாடலின் கருத்து. நால்திசைப் பரவையும் - இதன்கண் உள்ள உம்மை நான்கு திசைகளிலும் உள்ள கடல்கள் யாவற்றையும் உளப்படுத்தலின் முற்றும்மையாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As when, at the coming of the final day, the oceans of the four quarters,
- rising as the wind roars and rises, over the whole world
- surge up roaring in defiance and come pressing in:
- so were the arms that circled every quarter, and the two went inside them.
What the poem says
The brothers are now caught inside the ring formed by Kavantaṉ's arms. The poet compares the arms closing around them to the oceans of the four directions rising and rolling in from every side at the end of the world, when the cosmic wind drives them over the land.