கம்பராமாயணம் 3736 · ஆரணிய 10.8

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

இளவலை நோக்கினன் - இராமபிரான் தம்பியை நோக்கி; 'ஏழையை உளைவு செய் இராவணன் - சீதைக்குத் துன்பம் தருகின்ற இராவணன், உறையும் ஊரும் - வாழ்கின்ற ஊர்; இவ் அளவையது ஆகுதல் ஐய அறிதி - இந்த எல்லைக்குள் இருப்பதை அறிக, நம் கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்' - கிளர்கின்ற நம் பெருந் துயரமும் அழிந்தது'; என - என்று சொல்ல,

கவந்தன் கரங்களின் நெருக்கலால் ஏற்படும் விளைவுகள் என்பதை அறியாமல், ஏற்படும் ஆரவாரங்களும் நிலை குலைவுகளும் அரக்கர் சேனையின் வரவால் விளைவன என்று தவறாக நம்பினர். சேனையின் வரவு என்று கருதியதால், அச் சேனையை ஏவும் இராவணனது இருக்கையும் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பது இராமனின் கருத்து. 'இராவணன் சேனை வந்து விட்டதால் போரிட்டு வென்று சீதையை மீட்டுவிடலாம்' என்ற நினைப்பினால், 'நம் பெருந்துயரும் கீண்டது' என்கிறான் இராமன். அறிவு குறைந்தவள், பேதை, வலிமை குறைந்தவள் பெண் என்ற பழங்கருத்தினால் சீதாபிராட்டியையும் 'ஏழை' என்றது மரபு வழிப்பட்ட புலமை. இளையவனை 'ஐய' என்றது அன்பினால் வந்த மரபு வழுவமைதி. கிளர் துயரம் - வினைத்தொகை; பெருந் துயரம் - பண்புத் தொகை. இச் செய்யுள் குளகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Irāmaṉ looked at his younger brother: "The city where dwells
  2. Irāvaṇaṉ, who torments the gentle one, lies within this
  3. short distance, you must see it, my dear! Our
  4. great sorrow that rose up is now torn away," he said.

What the poem says

Still believing that the uproar comes from a demon army, Irāmaṉ reasons that Irāvaṇaṉ's city must be close by. If the army is here, he can fight, win and recover Cītai, so he tells his brother that their grief is as good as over. He calls Cītai "the gentle one", using a word that traditionally describes a woman as simple and defenceless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷavalai nōkkiṉaṉ irāmaṉ,'' ēḻaiyai
uḷaivu cey irāvaṇaṉ uṟaiyum ūrum iv
aḷavaiyatu ākutal aṟiti, aiya! nam
kiḷar perun tuyaramum kīṇṭatu ām '' eṉṟāṉ.