கம்பராமாயணம் 3744 · ஆரணிய 10.16

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓத நீர் மண் இவை முதல ஓதிய - குளிர்ந்த நீர் மண் முதலாக ஓதப்பட்ட; பூதம் ஓர் ஐந்தினில் - ஐந்து பூதங்களினால்; பொருந்திற்று அன்றி - (இவனது உடல்) அமைந்து பொருந்தியது என்பதல்லாமல்; வேத நூல் வரன்முறை விதிக்கும் - வேத நூல்கள் மரபுகள் வகுத்த; ஐம்பெரும் பாதகம் திரண்டு - ஐந்து பெரும் பாதகங்களே ஓர் உடம்பாக ஒன்று சேர்ந்து; உயிர் படைத்த பண்பினான் - உயிர் பெற்றுவிட்டது போன்ற தன்மை உடையவன்.

உடம்புகள் ஐந்து பூதச் சேர்க்கையால் உண்டாவன. இது பொதுவிதி. கவந்தனின் உடம்பு, பிற உடம்புகள் போல் ஐம்பூதங்களால் ஆனது அன்று; பஞ்ச மகா பாதகங்கள் ஒன்று திரண்டு கவந்தனின் மேனி ஆயின என்கிறார் கற்பனைவல்ல கம்பர். தற்குறிப்பேற்ற அணி. ஐந்து பூதங்கள்; மண், நீர், அனல், காற்று, வான். ஐந்து பாதகங்கள் கொலை, களவு, காமம், பொய், கள் உண்ணல்; வேறுவகையில் கூறுதலும் உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Not made, as bodies are, of the five elements
  2. that are told of, the sea's water, the earth and the rest,
  3. but as if the five great sins that the Vedic texts by rule lay down
  4. had gathered together and taken life: such was his nature.

What the poem says

All bodies are said to be made of the five elements: earth, water, fire, air and space. Kavantaṉ's body seems instead to be made of the five great sins of the scriptures, gathered into one living shape. The commentary lists them as killing, theft, lust, lying and drinking liquor, noting that other lists exist. The poet is suggesting a reason for the monster's form, a favourite figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōta nīr maṇ ivai mutala ōtiya
pūtam ōr aintiṉil poruntiṟṟu aṉṟiyē,
vēta nūl varaṉmuṟai vitikkum aim perum
pātakam tiraṇṭu uyir paṭaitta paṇpiṉāṉ.