கம்பராமாயணம் 3804 · கிட்கிந்தா 1.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
களிப்படா மனத்தவன் - (சீதையைப் பிரிந்ததால்) மகிழ்ச்சி இல்லாத மனத்தையுடைய இராமன்; காணின் - தம்மைக் கண்டால்; கற்பு எனும் கிளிப்படா மொழியவள் - கற்பின் வடிவமாகத் திகழும் கிளியினிடமும் அமையாத இனிய மொழிகளை உடைய சீதையின்; விழியின் கேள் என - கண்களுக்கு உறவானவை (ஒப்பாவன) என எண்ணி; துளிப்படா நயனங்கள் - முன்னர் ஒருபோதும் நீர்துளிக்காத கண்களில்; துளிப்ப - நீர்துளிக்க; சோரும் என்று - கலங்குவான் என்று; ஒளிப்படாது - வெளிப்படாது; ஆயிடை - அவ்விடத்தில்; ஒளிக்கும் மீனது - மறைந்துகொள்ளும் மீன்களை உடையது.
கிளியின்மொழி மகளிர் மொழிக்கு இனிமையால் ஒப்புமை ஆயினும், சீதையின் மொழி கிளிமொழியினும் இனிமை பொருந்தியது என்பதால் 'கிளிப்படா மொழியவள்' என்றார். நீரிடை மீன்கள் மறைதல் இயல்பு எனினும், தம்மைக் காணநேரின் இராமபிரானுக்குச் சீதையின் கண்கள் நினைவிற்கு வர வருந்துவானாதலின், அதைத் தவிர்க்க மீன்கள் மறைந்து ஒளிவதாகக் கற்பித்துக் கூறியதால் இஃது ஏதுத்தற்குறிப்பேற்ற அணியாம். கற்பின் வடிவமாகச் சீதை திகழும் நிலையைச் சுந்தரகாண்டத்தும் கம்பர் 'கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன் (6035) என்பர்.
'துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்' என்றது இராமன் உலகியல் மனிதனாகத் துன்பங்களை அனுபவிப்பான் என்பதை உணர்த்துகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If he whose heart knows no joy sees us, he will think us kin to the eyes
- of her who is chastity itself, whose speech no parrot can match,
- and his eyes that never shed a tear will drip and he will faint"; so,
- not showing themselves, the fish hid away there.
What the poem says
The fish in the lake keep out of sight, and the poet explains why. Fish are the classic comparison for a woman's eyes, so if Irāmaṉ saw them he would think of Cītai's eyes and break down weeping. To spare him they hide. Cītai's voice is sweeter than a parrot's, the usual comparison for a sweet voice. The commentary notes that the man whose eyes never wept now suffers like any human being.