கம்பராமாயணம் 3819 · கிட்கிந்தா 1.24

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்ண நறுந்தாமரை மலரும் - அழகிய மணம் மிக்க தாமரை மலர்களையும்; வாசக் குவளை நாள் மலரும் - வாசனை பொருந்திய அன்றலர்ந்த குவளை மலர்களையும்; புண்ணின் எரியும் - புண்போல் எரிகின்ற; ஒரு நெஞ்சம் - (சீதையின் பிரிவால்) தனிமையுற்றுக் கலங்கும் நெஞ்சிற்கு; பொதியும் மருந்தின் - மேலே தடவுகின்ற மருந்து போல; தரும் பொய்காய் - காட்டுகின்ற பொய்கையே! கண்ணும் முகமும் - (சீதையின்) கண்களையும் முகத்தையும்; காட்டுவாய் - காட்டுகின்ற நீ; வடிவும் ஒருகால் காட்டாயோ - அவள் முழுவடிவத்தையும் ஒருமுறையேனும் காட்டமாட்டாயா? ஒண்ணும் என்னின் - தம்மால் உதவ இயலுமாயின்; அஃது உதவாது - அவ்வுதவியைச் செய்யாமல்; உலோவினாரும் உயர்ந்தாரோ - உலோபம் செய்பவர்களும் உயர்ந்தவர்கள் ஆவரோ? (ஆகார்).

பொய்கையில் மலர்ந்துள்ள தாமரையும் குவளையும் பிராட்டியின் கண் போல் இருந்ததால் இராமனின் புண்பட்ட நெஞ்சிற்கு மருந்து போலாகிச் சிறிது துன்பமாற்றின. கண்ணையும் முகத்தையும் காட்டுகின்ற பொய்கை முழு வடிவையும் காட்ட வேண்டும் என வேண்டினான். தாமரை மலர், குவளை மலர் என்று உவமானப் பொருள்களைக் கூறியதற்கேற்ப, முகமும் கண்ணும் என்னாது, கண்ணும் முகமும் எனக் கூறியது எதிர்நிரல்நிறை அணியாகும். உலோவினோர் - வினையாலணையும் பெயர்; ஓகாரம் எதிர்மறை. "உளப்பரும் பிணிப்பறா உலோபம் ஒன்றுமே அளப்பருங்குணங்களை அழிக்கும்" (363) என்பதால் உலோபிகள் உயர்ந்தோர் ஆகார் என்பது புலனாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Lovely fragrant lotuses and the morning's scented blue lilies
  2. you give, like a salve laid on a heart that burns like a wound, O lake!
  3. You show me her eyes and her face; will you not show me her whole form, just once?
  4. When one can help and holds it back, are the stingy ever counted great?"

What the poem says

Irāmaṉ now speaks to the lake itself. Its lotuses and blue lilies recall Cītai's face and eyes, and the reminder soothes his burning heart a little, like ointment on a wound. But if it can show him her face and eyes, why not her whole form? Refusing help when one could give it is miserliness, and misers are never thought great. The commentary notes that "eyes and face" reverses the order of "lotus and lily", a deliberate figure.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṇa naṟun tāmarai malarum vācak kuvaḷai nāḷmalarum.
puṇṇiṉ eriyum oru neñcam potiyum maruntiṉ tarum poykāy!
kaṇṇum mukamum kāṭṭuvāy; vaṭivum orukāl kāṭṭāyō?
oṇṇum eṉṉiṉ aḵtu utavātu ulōviṉārum uyarntārō?