கம்பராமாயணம் 3892 · கிட்கிந்தா 3.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என இனைய நினைந்து - (சுக்கிரீவன்) என்று இத்தன்மையானவற்றை ஆலோசித்து; எண்ணி - ; இவர்கின்ற - மேன்மேலும் பெருகுகின்ற; காதல் - அன்பாகிய; ஓதக்கனை கடல் நின்று - வெள்ளத்தை உடைய ஒலிக்கின்ற கடலினின்றும்; கரை ஏறா - கரை ஏறாமல், கண் இணை - கண்கள் இரண்டும், களிப்ப நோக்கி - பெரு மகிழ்ச்சி அடையுமாறு பார்த்து; அனகனை - குற்றமற்றவனான இராமனை; குறுகினான் - அணுகினான்; அவ் அண்ணலும் - அந்தப் பெருமை பொருந்திய இராமனும்; அருத்தி கூர - அன்பு மிக; புனை மலர்த் தடக்கை நீட்டி - அழகிய தாமரை மலர் போன்ற பெரிய கைகளை நீட்டி; போந்து - 'இங்குவந்து; இனிது இருத்தி - இனிதாக இருப்பாய்; என்றான் - என்று உபசரித்தான்.
சுக்கிரீவன் இராமனை மிக்க அன்போடு அணுக, இராமனும் சுக்கிரீவனைக் கருணையுடன் வரவேற்று உபசரித்தான் என்க. இங்கு இருத்தி என்று காட்ட இராமன் கைநீட்டினான், இஃது உபசாரக் குறிப்பு. அச்சம் இன்றி இருக்கலாம் என்பதால் 'இனிது இருத்தி' என்றான். காதல் ஓதக் கனை கடல் - உருவகம்; அனகன் - குற்றமற்றவன்; இராமன்; அருத்தி - ஆசை. வாலியை மறைவிடத்திலிருந்து கொல்லப்போகும் பெருமானைக் 'குற்றமற்றவன்' என்று இங்கேயே கூறத் தொடங்கும் கவிஞர் கருத்தினை ஓர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking thus and pondering such things, unable to climb out
- onto the shore from the roaring sea of rising love, gazing until both his eyes rejoiced,
- he drew near the faultless one; and that lord, with deep affection,
- stretched out his large hand, lovely as a flower, and said, "Come, sit here at ease."
What the poem says
Overwhelmed, Cukkirīvaṉ is like a man swept in a roaring sea of love who cannot reach the shore. Feasting his eyes on Irāmaṉ, he comes near, and Irāmaṉ warmly holds out his lotus hand and invites him to sit at ease, with nothing to fear.
The commentary notes that the poet calls Irāmaṉ "the faultless one" here, just before he will kill Vālī from hiding, as if defending him in advance.