கம்பராமாயணம் 3900 · கிட்கிந்தா 3.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனகன் சொன்ன வார்த்தை - குற்றமற்றவனாகிய இராமன் சொன்ன சொல்; எக்குலத்துளோர்க்கும் - எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்; மறையினும் - வேதவாக்கைக் காட்டிலும்; மெய் என்று உன்னா - உண்மையானதாகும் என்று எண்ணி; குரக்குச் சேனை ஆர்த்தது - குரங்குக் கூட்டம் ஆரவாரம் செய்தது; அஞ்சனை சிறுவன் - அஞ்சனையின் புதல்வனான அனுமன்; மேனி - மேனியை; உரோமம் புளகங்கள் - மயிரச்சிலிப்புகள்; பொடித்துப் போர்த்தன - அரும்பி மறைத்து விட்டன; விண்ணோர் - தேவர்கள்; பூவின்மாரி தூர்த்தனர் - மலர் மழையால் பூமியை நிரப்பினர்; மேகம் சொரிந்தன - மேகங்கள் மழையைப் பொழிந்தன.
இராமன் கூறிய உரைகளால் வாலிவதம் உறுதி என்ற மகிழ்ச்சியாலும், யாரினும் சிறந்த இராமன் நட்புக்கிடைத்த களிப்பாலும் குரங்குச் சேனை மகிழ்ந்தது எனலுமாம். தான் இராமனிடத்துத் தூதுபோய் வந்தது பயன்பெற்றதனால் அனுமன் மேனி பொடித்தனன். இராவண வதம் நடைபெறும்; தங்கள் துன்பம் நீங்க வழி ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியால் வானவர் பூமாரி பொழிந்தனர். இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The monkey army roared; on the body of Añcaṉai's son
- the hairs rose and bristled until they covered him; the gods poured down
- a rain of flowers; the clouds showered rain; for they all held that the word the faultless one had spoken
- was, for those of every race, truer than the Veda itself.
What the poem says
Irāmaṉ's pledge sets off rejoicing on every side. The monkey army roars, sure that Vālī's end has come; Aṉumaṉ's hair stands on end with joy that his mission has borne fruit; the gods shower flowers, foreseeing Irāvaṇaṉ's death and the end of their own troubles; and the clouds rain, an auspicious sign.
All of them trust Irāmaṉ's word as truer than the Vedas.