கம்பராமாயணம் 3945 · கிட்கிந்தா 3.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரவோய் - வலிமை உடையவனே! உன்தன் உள்ளத்தின் - உன் மனத்தில்; உள்ளதை - உள்ள கருத்தை; உன்னினேன் - (யான்) ஊகித்து அறிந்து கொண்டேன்; அன்ன வாலியை - அத்தகைய வலிமை வாய்ந்த வாலியை; காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் - யமனுக்குக் கொடுக்கும்படியான ஒப்பற்ற வலிமை; இன்ன வீரர்பால் இல்லை - இந்த வீரர்களிடத்தில் இல்லை; என்று அயிர்த்தனை - என்று ஐயம் கொண்டாய்; இனி யான் சொன்ன கேட்டு - இனி யான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு; அவை கடைப்பிடிப்பாய்- அவற்றை உறுதியாகக் கொள்வாய்; எனச் சொன்னான் - என்று சொல்வானாயினன்.
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரவல்ல அனுமன் தன் அறிவால் சுக்கிரீவன் மனத்தில் கொண்ட ஐயத்தை உணர்ந்துகொண்டான். காலனுக்கு அளிப்பது - கொல்வது என்னும் பொருளைத் தருவது. அன்ன வாலி என்றது. எதிர்த்தார் வலிமையில் பாதியைத் தான் பெறுதற்குரிய வரம் பெற்ற வாலி என அவன் பெருமையைக் கூறியதாகும். இன்ன வீரர் - இங்கு வந்துள்ள இராமலக்குவரைக் குறிக்கும்.
யான் சொன்ன என்பதில் சொன்ன காலவழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I have guessed what is in your heart, mighty one:
- 'The power to hand such a Vālī over to Death
- is not in these heroes,' you doubted. Now listen to what
- I say and hold fast to it," he said.
What the poem says
Aṉumaṉ, who can read what is coming from what is in front of him, sees Cukkirīvaṉ's doubt. "Such a Vālī" recalls the boon by which Vālī takes half the strength of anyone who faces him. "These heroes" are Irāmaṉ and Ilakkuvaṉ.