கம்பராமாயணம் 3966 · கிட்கிந்தா 4.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொய் இல் மாருதி முதலினோர் - பொய்மையில்லாத அனுமன் முதலானவர்கள்; இன்னம் - 'இன்னமும்; எய்தல் காண்டும் கொல் - அம்பு எய்தலைக் காணுதல் வேண்டும் போலும்'; என்று - என்று சொல்லிக் கொண்டு; அரிதின் வந்து எய்தி - அரிதாக வந்து இராமன் பால் சேர்ந்து; புகழ்வுறும் பொழுதில் - இராமனின் வில்லாற்றலைப் புகழ்ந்து கொண்டிருக்கையில்; மொய் கொள் - வலிமையைக் கொண்ட, வார் சிலை நாணினை - நீண்ட வில்லின் நாணினை; முறை உற வாங்கி - முறைப்படி நன்றாக இழுத்து; வெய்ய வாளியை - கொடிய அம்பை; ஆளுடை வில்லியும் - எல்லா உயிர்களையும் அடிமையாகக் கொண்ட வில்லாற்றல் மிக்க இராமனும்; விட்டான் - தொடுத்தான்.
மற்றவர்கள் நாணொலி கேட்டு நடுங்கிக் கலங்க, அனுமன் முதலிய ஒரு சில வீரர்கள் ஒருவாறு தேறி அரிதின் முயன்று இராமன் பக்கம் வந்தனர் என்பதால் 'அரிதின் வந்து எய்தி' என்றார். அனுமன் உண்மை தவறாதவன் என்பதால் 'பொய்யில் மாருதி' என்றார் 'பொய்யிலாதவன்' (3853) என்றமையும் 'மெய்ம்மை பூண்டான்' (4801) என்றமையும் காண்க. ஆளுடை வில்லி என்று இப்பாடலில் இராமனைக் குறிப்பிடும் கம்பர் 'என்னை ஆளுடை நாயகன்' "ஆண்ட நாயகன்" (5207, 5778) என்று இராமனைக் குறிப்பிடல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying "We must yet see him shoot," they barely managed to come up,
- truthful Māruti and the others, and as they were praising him,
- he drew the string of his strong, long bow back in due form,
- and the Bowman who is master of all let fly the fierce arrow.
What the poem says
A few of the bravest, led by the truthful Aṉumaṉ, pull themselves together and come back to Irāmaṉ's side, eager to see the shot. Irāmaṉ draws the bow correctly and looses his arrow. The poet calls him the Bowman who has all beings as his servants, a title he uses for Irāmaṉ elsewhere too.