கம்பராமாயணம் 3996 · கிட்கிந்தா 6.8

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அப்பூவை பூண்கள் - நாகணவாய்ப் பறவை போன்று இனிமையாகப் பேசும் அந்தச் சீதை அணிந்த அணிகலன்கள்; மோந்திட - (இராமன் முகர்ந்து பார்த்தபோது; நறுமலர் ஆன - நறுமணம் வீசும் மலர்கள் போலாயின; மொய்ம்பினில் ஏந்திட - அவற்றைத் தோள்களில் தாங்கிக் கொண்ட போது; உத்தரியத்தை ஏய்ந்தன - மேலாடையை ஒத்தன; ஒளி தழுவ - அவற்றின் ஒளி (இராமன் மீது) படிவதால்; சாந்தமும் ஆய் - சந்தனம் போலவும் ஆகி, போர்த்தலால் - (ஒளியால் உடம்பை) போர்த்தியமையால்,; பூந்துகில் ஆய - அழகிய போர்வையும் ஆயின.

பிராட்டியின் இயற்கை நறுமணம் மிக்க மேனியில் விளங்கிய அணிகலன்களாதலின், இராமபிரான் அவற்றை முகர்ந்து பார்க்கையில் மணமிகு மலர்களால் இன்பம் செய்தன என்பார் 'மோந்திட நறுமலரான' என்றும், அவற்றை மேலாடை போல இராமன் தோளிலிட்டு மகிழ்ந்தனன் என்பார், 'ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன' என்றும், அவற்றைத் தன் உடலில் எங்கும் படுமாறு தழுவியதால் சந்தனம் பூசியது போல் விளங்கியது என்பார், 'சாந்தமும் ஆய்' என்றும், அவற்றின் ஒளி மேனி முழுவதும் பரவி போர்வை போர்த்தது போல விளங்கியது என்பார் 'போர்த்தலால் பூந்துகில் ஆய' என்றும் கூறினார். அந்த அணிகலன்கள் பல வகையாய் விளங்கி இராமனுக்கு ஆறுதலின்பம் விளைவித்தமையைக் காணலாம். பூவை - உவமை ஆகுபெயர்; பூந்துகில் - அழகிய சித்திர வேலைப்பாடு அமைந்த த்து என்றும் ந் துகில் - ஆடை; இங்கே மேற்போர்வை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he smelled them they became fragrant flowers; when he
  2. held them on his shoulders they were like an upper cloth;
  3. they became sandal paste as their light embraced him, and wrapping him round,
  4. they became a lovely mantle, the jewels of that myna-sweet woman.

What the poem says

The poet calls Cītai a pūvai, a myna, for her sweet voice. Her jewels still carry the scent of her body, so to Irāmaṉ they smell like flowers. Draped over his shoulders they are his upper cloth, their glow on his skin is sandal paste, and their light wrapped round him is a fine shawl. In every way they comfort him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mōntiṭa naṟumalar āṉa; moympiṉil
ēntiṭa uttariyattai ēyntaṉa;
cāntamum āy oḷi taḻuvap pōrttalāl
pūn tukil āya; ap pūvai pūṇkaḷē.