கம்பராமாயணம் 3999 · கிட்கிந்தா 6.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாங்கினன் இருத்தி - (அங்ஙனம் சுக்கிரீவன் இராமனைத் தாங்கிக்கொண்டு உட்காரவைத்து; அத்துயரம் தாங்கலாது - (அப்பெருமானுக்கு ஏற்பட்ட) அத்துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல்; ஏங்கிய நெஞ்சின் - வருந்திய மனத்தினனாய்; வீங்கிய தோளினாய் - (இராமனை நோக்கி) 'பருத்த தோள்களை உடையவனே! வினையினேன் - தீவினையுடையேனாகிய நான்; இவ் அணி வருவித்தே - இந்த அணிகலன்களை உம்மிடம் கொண்டு வரச்செய்து; உயிர் வாங்கினென் - உமது உயிரைப் போக்கினேன்; எனா - என்று கூறி; இரங்கி விம்முவான் - இரங்கி விம்மலுற்று வருந்தினான்.
சீதையின் அணிகலன்களைக் கொணர்ந்து காட்டியமையால்தான் இராமன் இவ்வளவு துன்பம் அடைந்தான் ஆதலின், அத்துன்பத்திற்குக் காரணமான தன்னைத் 'தீவினையுடையேன்' எனக் குறிப்பிட்டு வருந்தினான் சுக்கிரீவன். தாங்கினன் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Holding him and seating him, unable to bear that grief,
- with an aching heart, he wept and sobbed in pity:
- "You of mighty shoulders! Wretch that I am, I have taken
- your life by bringing you these jewels!"
What the poem says
Cukkirīvaṉ blames himself: it was showing Irāmaṉ the jewels that caused this agony, so he calls himself ill-fated, as if he had nearly killed his friend.