கம்பராமாயணம் 4001 · கிட்கிந்தா 6.13

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருமகள் அனைய - இலக்குமியை ஒத்த; அத்தெய்வக் கற்பினாள் - தெய்வத்தன்மை பொருந்திய கற்புடைய சீதை; வெருவர செய்து உள - அஞ்சுமாறு அவளுக்குத் தீங்கு செய்துள்ள; வெய்யவன் - கொடியவனான இராவணனுடைய; புயம் இருபதும் - இருபது தோள்களும், ஈர் ஐந்து தலையும் - பத்துத் தலைகளும்; நிற்க - கிடக்கட்டும்; உன் ஒரு கணைக்கு - உனது ஓர் அம்பிற்கு; உலகம் ஏழும் ஆற்றுமோ - ஏழு உலகங்களும் சேர்ந்தாலும் ஏற்றுத் தாங்கும் வலிமையுடையன ஆகுமோ? (ஆகாது என்றபடி).

முன் பாடலில் தன் ஆற்றலைக் கூறிய சுக்கிரீவன், தன் எளிய நிலையுணர்ந்து இராமனின் ஆற்றலை எடுத்துக் கூறுகிறான். சீதை அஞ்சுமாறு தீங்கு செய்த இராவணனின் இருபது தோள்களும், பத்துத்தலைகளும் இராமனது ஒருகணை முன் நிற்கவல்லன அல்ல எனக் கூறினான். தெய்வக் கற்பினாள் - சீதை. "கற்பெனும் பெயரது ஒன்றும் களி நடம் புரியக் கண்டேன்" 'வான் உயர் கற்பினாள்' என்று (6035, 6038). பின்னரும் அனுமன் குறித்தமை காண்க. 'கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது, பொற்புடைத் தெய்வம் யாங்கண்டிலம்' (சிலப் - 12 - 15) என்ற அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன. 'தெய்வக் கற்பினாள்' என்றதால் சீதைக்கு எந்தத் தீங்கும் வராது" என்றும் சுக்கிரீவன் ஆறுதல் கூறினன் எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The cruel one who frightened her of divine chastity,
  2. like Tirumakaḷ herself: let his twenty arms
  3. and ten heads be; could the seven worlds together
  4. withstand a single arrow of yours?

What the poem says

Having spoken of his own strength, Cukkirīvaṉ modestly turns to Irāmaṉ's. Irāvaṇaṉ's twenty arms and ten heads are nothing; not even all seven worlds could stand against one of Irāmaṉ's arrows. Cītai is compared to Tirumakaḷ, the goddess Lakṣmī. Calling her chastity divine also hints that no harm can come to her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tirumakaḷ aṉaiya at teyvak kaṟpiṉāḷ
veruvarac ceytuḷa veyyavaṉ puyam
irupatum īr aintu talaiyum niṟka; uṉ
oru kaṇaikku āṟṟumō? ulakam ēḻumē.