கம்பராமாயணம் 4007 · கிட்கிந்தா 6.19

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எரிகதிர்க் காதலன் - சுடுகின்ற கதிர்களை உடைய சூரியன் மகனான சுக்கிரீவன்; இனைய கூறலும் - இவ்வாறான வார்த்தைகளைச் சொன்ன அளவில்; திரு உறை மார்பனும் - இலக்குமியாம் திருமகள் தங்கிய மார்பினை உடைய இராமனும்; தெளிவு தோன்றிட - தெளிவு பிறக்க; ஒரு வகை உணர்வு வந்து - ஒருவாறு தன் நினைவு வரப் பெற்று; அருவி அம் கண்திறந்து - அருவிபோல் கண்ணீர் பெருக்கும் தன் அழகிய கண்களைத் திறந்து; அன்பின் நோக்கினான் - அன்போடு (சுக்கிரீவனைப்) பார்த்து; உரைப்பது ஆயினான் - பின்வருமாறு பேசலுற்றான்.

சோர்வடைந்து கண்களை மூடியவண்ணம் இருந்த இராமன் சுக்கிரீவன் கூறியவற்றைக் கேட்டதும் கண்களைத் திறந்து, அன்பொடு பார்த்துப் பேசலானான் என்பதாம். திரு உறை மார்பன் - திருமகள் தங்கிய மார்பினை உடைய திருமாலின் அவதாரமான இராமபிரான். 'அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்பது திருவாய்மொழி (6-10-10). எரிகதிர்- சூரியன்- வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. காதலன் -மகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the beloved son of the blazing Sun had spoken thus,
  2. he opened his lovely eyes that streamed like waterfalls, and looked on him with love,
  3. he on whose breast Tiru dwells, as clarity dawned
  4. and some awareness returned, and he began to speak.

What the poem says

Irāmaṉ, who had sat with his eyes closed in grief, revives at Cukkirīvaṉ's words, opens his tear-filled eyes and looks at him with affection. He is "the one on whose breast Tiru dwells" because the goddess Lakṣmī lives on Viṣṇu's chest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eri katirk kātalaṉ iṉaiya kūṟalum,
aruvi am kaṇ tiṟantu, aṉpiṉ nōkkiṉāṉ,
tiru uṟai mārpaṉum, teḷivu tōṉṟiṭa,
oruvakai uṇarvu vantu, uraippatu āyiṉāṉ.