கம்பராமாயணம் 4024 · கிட்கிந்தா 7.2

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உழை உலாம் நெடுங்கண் - (அந்த வழி எங்கும்) மான் போலும் பார்வையினை உடைய, மாதர் ஊசல் - மகளிர் ஆடும் ஊஞ்சல்களும்; ஊசல் அல்லவேல் - ஊஞ்சல்கள் இல்லாத இடங்களில், தழை உலாவு - தழைகள் காற்றில் அசைந்தாடும்; சந்து அலர்ந்த சாரல் - சந்தன மரங்கள் மலர்ந்து விளங்கும் மலைச்சாரல்களும்; சாரல் அல்லவேல் - மலைச் சாரல்கள் இல்லையெனின்; மழை உலாவு முன்றில் - மேகங்கள் தவழ்கின்ற மலைகளின் முற்பகுதிகளும்; அல்ல - அவையல்லாத இடங்களில்; மன்றல் நாறு - மணம் கமழ்கின்ற; குழை உலாவும் சண்பகச் சோலை - தளிர்கள் அசையும் சண்பகச் சோலைகளும்; சோலை அல்ல - சோலைகள் இல்லாத இடங்களில்; பொன் செய் குன்றமே - பொன் போன்ற அழகிய குன்றுகளுமே (மிகுந்து காணப்பெற்றன.

இராமலக்குவர் சென்ற நீண்ட வழியெங்கும் ஊஞ்சல்களும், சந்தன மலைச் சாரல்களும், மேகங்கள் தவழ்கின்ற மலை முற்றங்களும், சண்பகச் சோலைகளும், அழகிய குன்றுகளும் இருந்தன என அந்நாட்டின் வளம் உணர்த்தியவாறு. ஊசல், ஊசல் அல்ல சாரல், சாரல் அல்ல முன்றில், அவையல்ல சோலை, சோலை அல்ல குன்றம் எனத் தொடர்புபடுத்திக் கூறியதால் மாலை அணியின் பாற்படும். 'உலாம்'- உலாவும் என்பதின் விகாரம். முன்றில் - இலக்கணப் போலி; பொன் செய் - செய் உவம உருபு; (பொன் போல). பொன் செய் குன்றம் - பொன்னை விளைவிக்கும் மலை, எனவும் பொன்னால் இயற்றப்பட்ட செய் குன்று எனவும் பொருள் கொள்வாரும் உளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swings for women with long, doe-like eyes; where there were no swings,
  2. slopes where sandal trees bloomed with swaying leaves; where there were no slopes,
  3. forecourts where clouds drifted; and where there were none, groves of fragrant champak
  4. with swaying shoots; and where there were no groves, mountains as if made of gold.

What the poem says

The road to Kiṭkintai is described as a chain. Wherever one beauty ends, the next begins: swings, sandal-wood slopes, cloud-wrapped terraces, champak groves, golden hills. Linking the items this way is the figure called the "garland". "Golden" may mean gold-bearing hills or hills like wrought gold.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḻai ulām neṭuṅ kaṇ mātar ūcal; ūcal allavēl,
taḻai ulāvu cantu alarnta cāral; cāral allavēl,
maḻai ulāvu muṉṟil; alla, maṉṟal nāṟu caṇpakak
kuḻai ulāvu cōlai; cōlai alla, poṉ cey kuṉṟamē.