கம்பராமாயணம் 4034 · கிட்கிந்தா 7.12

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடித்து , உரப்பி , 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பன் ' என்று
அடித் தலங்கள் கொட்டி , வாய் மடித்து , அடுத்து , அலங்கு தோள்
புடைத்து நின்று , உளைத்த பூசல் புக்கது என்ப ; மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி தொளைக்கணே .

பொருள் · Meaning in Tamil

வந்து போர் எதிர்த்தியேல் - 'என்னுடன் நீ போரில் எதிர்த்து வருவாயானால்; அடர்ப்பென் என்று - யான் உன்னைக் கொல்வேன் என்று; இடித்து உரப்பி - அதட்டிக் கூறி; அடித்தலங்கள் கொட்டி - தன் கால்களால் ஓசை உண்டாகுமாறு தரையில் மிதித்து; வாய் மடித்து - சினத்தால் வாய் உதடுகளை மடித்துக் கொண்டு; அடுத்து அலங்கு தோள் புடைத்து - அடுத்து விளங்குகின்ற தன் தோள்களைத் தட்டிக் கொண்டு; நின்று உளைத்த பூசல் - நின்று வலியப் போருக்கு அழைத்த (சுக்கிரீவனின்) ஆரவாரம்; அங்கு - கிட்கிந்தை நகரத்தில்; இடம் மிக்குத் துடிப்ப - இடத் தோளும் இடக்கண்ணும் துடிக்க; உறங்கு வாலி - உறங்கிக் கொண்டிருக்கும் வாலியின்; திண்செவித் துளைக்கண் - வலிய செவித்துளையிலே; புக்கது என்ப - சென்று புகுந்தது என்பர்.

அடித்தலம் கொட்டுதல் - பாதங்களைத் தரையில் தட்டி மிகுத்து ஓசை உண்டாகும்படி நடத்தல்; வாய்மடித்தல் - வெகுளியின் மெய்ப்பாடு. ஆடவர்க்கு இடப்பக்கம் துடித்தல் தீ நிமித்தத்திற்கு அறிகுறி என்பர். சுக்கிரீவனின் ஆரவாரம் வாலியின் செவியில் படுகையில், அவனது அழிவைக் குறிக்கும் வகையில் அவனது இடப்பக்கம் துடித்த செய்தி கூறப்பட்டது. 'மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத, துன்னு தோளும், இடம் துடியா நின்றான்' (7348). 'செயிரில் தீர்ந்த செழுந்தாமரைக் கண் இடனாடலும்' (சிந்தா. 1150), "இடுக்கண் தருதற் கேதுவாகி, இடக்கண் ஆடலும்” (பெருங்கதை. 2-18- 32-33) என்னும் இடங்கள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன. பூசல் - போர் ஆரவாரம். முதல் 12 பாடல்களை நான்கு சீரடிகளாய்ப் பிரித்து கலிவிருத்தம் என்றும் கொள்வதுண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taunting and shouting, "If you come out and face me in battle, I will crush you,"
  2. stamping his feet, biting his lip, again and again slapping his gleaming shoulders,
  3. he stood and bellowed his challenge; and that clamour, they say, as his left side
  4. twitched hard, entered the strong ear of Vālī, who lay asleep there.

What the poem says

Cukkirīvaṉ performs every gesture of a warrior calling out an enemy: threats, stamping, lip-biting in anger, slapping his shoulders. The sound reaches Vālī asleep in his palace.

As the noise enters his ear, Vālī's left shoulder and left eye twitch. For a man, a twitching of the left side was an evil omen, so the poet quietly signals that Vālī's end is near. The first twelve verses of the chapter can also be read as four-foot lines, in the kalivirutham metre.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭittu, urappi, 'vantu pōr etirttiyēl aṭarppaṉ ' eṉṟu
aṭittalaṅkaḷ koṭṭi, vāy maṭittu, aṭuttu, alaṅku tōḷ
puṭaittu niṉṟu, uḷaitta pūcal pukkatu eṉpa; mikku iṭam
tuṭippa aṅku uṟaṅku vāli tiṇ cevit tuḷaikkaṇē.