கம்பராமாயணம் 4037 · கிட்கிந்தா 7.15

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழி இறுதியில் - ஊழி இறுதியாகிய யுக முடிவில்; கொழுந் திரைக்கடல் - பெரிய அலைகளோடு கூடிய கடல்; கிளர்ந்தனைய - பொங்கி எழுந்தாற்போன்ற; கொள்கையான் - செருக்குடையவனாய் (வாலி), வல் விரைந்து எழுந்தனன் - (சுக்கிரீவனை அழிக்கும் பொருட்டு) மிகவிரைந்து எழுந்தான்; அக்கிரி அழுந்தியது - (அவன் எழுந்த வேகத்தால்) அந்தக் கிட்கிந்தைமலை நிலத்தினுள்ளே அழுந்தியது; தோள்புடை விசைத்த காற்றின் - (அவன்) தோள்களைப் பக்கங்களில் அசைத்து எழுப்பிய காற்றினால்; அருகில் மால்வரை - (அந்த மலையின்) அருகில் இருந்து பெரிய மலைகள்; விழுந்தன - நிலை பெயர்ந்து கீழே விழுந்தன.

இறுதி ஊழியில் என்பதனை ஊழி இறுதியில் எனக் கொள்க. கொள்கையான் - வீரமிகுதி, செருக்கு உடையான். வல் - விரைவை உணர்த்தும் இடைச் சொல். வல்விரைந்து - ஒரு பொருட் பன்மொழி. நிலத்தில் கிரி அழுந்துதலும், மால்வரைகள் விழுதலும் வாலியின் சினமிகுதியினையும் ஆற்றலையும் உணர்த்தும். உயர்வு நவிற்சி அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He rose, swift and fierce, like the deep-waved ocean
  2. surging up at the close of an age, so proud was he;
  3. that mountain sank into the ground; great hills nearby
  4. toppled in the wind whipped up by the swing of his shoulders.

What the poem says

Vālī springs up from his bed like the ocean rising at the end of time to flood the world.

The force of his rising presses the Kiṭkintai mountain down into the earth, and the air stirred by his swinging shoulders knocks over the mountains around it. The exaggeration shows both his rage and his strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntaṉaṉ, val viraintu, iṟuti ūḻiyil
koḻun tiraik kaṭal kiḷarntaṉaiya koḷkaiyāṉ;
aḻuntiyatu ak kiri; arukil māl varai
viḻuntaṉa, tōḷ puṭai vicaitta kāṟṟiṉē.