கம்பராமாயணம் 4052 · கிட்கிந்தா 7.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னது கேட்டவள் - அவ்வாறு வாலி சொல்லக் கேட்ட தாரை; அரச - (வாலியை நோக்கி) 'அரசே! இராமன் என்பவன் - இராமன், என்போன்; ஆயவற்கு - அந்தச் சுக்ரீவனுக்கு; இன் உயிர் நட்பு அமைந்து - இனிய உயிர்த் துணைவனாகி; உன் உயிர் கோடலுக்கு - உனது உயிரைக் கொள்வதற்கு; உடன் வந்தான் என - அவனுடன் வந்துள்ளான் என்று; துன்னிய அன்பினர் - நம்மிடம் நெருங்கிய அன்புடையவர்கள்; சொல்லினார் என்றாள் - சொன்னார்கள் என்று சொன்னாள்.
துன்னிய அன்பினர் சொல்லினார் - நமக்கு நன்மை புரியும் உண்மை அன்புடையார் சிலர் சொல்லக் கேள்வியுற்றேன் என்று உரைத்தனள் தாரை. இக்கூற்றால் தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது. தன்னை எதிர்ப்பவர் எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும், அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித் துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின் அரசியலறிவும் ஈண்டு நினைக்கத்தக்கது. 'சொல்லினார்' என்பதால் செய்தியைத் தீர விசாரித்துப் பின்னர்ச் செயற்பட வேண்டும் என அறிவுத்திறமும் புலனாகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing that, she said, "King, 'To that one,
- as a sweet friend dear as life, the one called Irāmaṉ
- has come along with him to take your life':
- so say those who love us closely."
What the poem says
Tārai now tells Vālī plainly what she has heard: Irāmaṉ has become Cukkirīvaṉ's close friend and has come with him to kill Vālī. She cites well-wishers who are close to them.
Her words show a queen who keeps track of what happens around the kingdom. Even if an enemy is weak, she urges, one should weigh the strength of his ally before going to war, and check a report carefully before acting on it.