கம்பராமாயணம் 4064 · கிட்கிந்தா 7.42

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

ஆற்றாது பின்னும் பகர்வான் - (இலக்குவன்) மனம் பொறுக்காமல் மேலும் கூறுவானாய்; வீர - 'பெரு வீரனே! அறத்து ஆறு அழுங்க - தரும நெறி கெட; தேற்றாது செய்வார்களை - தெளிவு பெறாது தீய காரியங்களைச் செய்பவர்களை; தேறுதல் செவ்விது அன்று - நம்புதல் நன்மை தருவதாகாது; தம் முனை - தன் தமையனையே; மாற்றான் என - பகைவன் என்று கொண்டு; கொல்லிய வந்து நின்றான் - கொல்லும் பொருட்டு வந்து நின்றுள்ள சுக்கிரீவன்; வேற்றார்கள் திறத்து - (உறவினரல்லாத) அயலார் திறத்தே; இவன் தஞ்சம் என் - உற்ற துணையாதல் எவ்வாறு?' என்றான் - என்று கேட்டான்.

தமையனையே கொல்லத் துணிந்தவன், உறவல்லாத அயலார்க்கு எங்ஙனம் துணையாவான் என்பதாலும், நம்பிக்கைக்கு மாறான செயலைத் தன் தமையனுக்குச் செய்பவன் பிறர்க்கு நல்லது செய்யான் என்பதாலும் சுக்கிரீவனை நம்பக்கூடாது என்பது இலக்குவன் கருத்தாகும். 'ஆற்றாது' என்னும் சொல் இலக்குவனது சகோதர பாசத்தையும், நேர்மையான போர்நெறியினையும் உணர்த்தும். அறத்தை நிலை நாட்டும் வீர நெறியையே இராமன் பின்பற்றுவான் ஆதலின் அவனை 'வீர' என விளித்தான். கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவனாகிய உனக்கு இப்படி ஒரு துணை வேண்டுமா என்ற கருத்தொடு 'வீர' என விளித்தான் என்றும் கொள்ளலாம்.

முனை - முன்னை என்பதின் இடைக்குறை. கொல்லிய - எதிர்கால வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Unable to bear it, he spoke again: "Those who, so that the way of dharma is ruined,
  2. act without thinking clearly are not wise ones to trust;
  3. he who has come and stands ready to kill his own elder brother as an enemy,
  4. what refuge could he be to outsiders, hero?" he said.

What the poem says

Ilakkuvaṉ presses his doubts. A man willing to kill his own elder brother cannot be trusted to keep faith with strangers. If he betrays his own blood, how will he stand by them?

He addresses Irāmaṉ as "hero", perhaps with a hint of reproach: Irāmaṉ, who needs no ally at all, has accepted a partner like this.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟṟātu piṉṉum pakarvāṉ, 'aṟattāṟu aḻuṅkat
tēṟṟātu ceyvārkaḷait tēṟutal cevvitu aṉṟāl;
māṟṟāṉ eṉat tammuṉaik kolliya vantu niṉṟāṉ,
vēṟṟārkaḷ tiṟattu ivaṉ tañcam eṉ? vīra! ' eṉṟāṉ.