கம்பராமாயணம் 4093 · கிட்கிந்தா 7.71

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எற்றும் , கையினை நிலத்தொடும் ; எரிப் பொறி பறப்பச்
சுற்றும் நோக்குறும் ; சுடு சரத்தினைத் துணைக் கரத்தால்
பற்றி , வாலினும் காலினும் வலி உறப் பறிப்பான்
உற்று , உறாமையின் உலைவுறும் ; மலை என உருளும் .

பொருள் · Meaning in Tamil

கையினை நிலத்தொடும் எற்றும் - (மேலும்) வாலி தன் கைகளை நிலத்தோடு மோதுவான்; எரிப் பொறி பறப்ப - (தன் கண்களிலிருந்து) நெருப்புப் பொறி பறக்கும்படி; சுற்றும் நோக்குறும் - நாற்புறமும் சுற்றிப் பார்ப்பான்; சுடு சரம்தனை - தன்னை வருத்திய அம்பினை; துணைக் கரத்தால் பற்றி - தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு; வாலினும் காலினும் - வாலினாலும் கால்களினாலும்; வலி உறப் பறிப்பான் - வலிமையுறப் பறிக்க; உற்று - முயன்று; உறாமையின் - (அம்பைப்) பறிக்க முடியாமையால்; உலைவுறும் - வருந்துவான்; மலை என உருளும் - மலை புரள்வது போல் (வலி தாங்காமல்) நிலத்தில் புரள்வான்.

அம்புபட்ட நிலையில் வேதனை தாங்காமல் வாலி செய்யும் செயல்கள் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. சுடுசரம் - நெருப்புப்போல் உட்புகுந்து எரிக்கும் அம்பு. தாடகை வதைப்படலத்தில் 'சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்' (388) எனக் கூறப்பெறும். பறிப்பான் - பானீற்று வினையெச்சம். சுடுசரம் - வினைத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He beats his hands against the ground; as sparks of fire fly
  2. he looks all around; the burning arrow he grips with both hands
  3. and, with his tail and feet too, tries with all his strength to tear it out;
  4. trying and failing, he is in torment; he rolls about like a mountain.

What the poem says

In agony, Vālī pounds the ground, glares about with fiery eyes, and tries with both hands, his tail and his feet to wrench the arrow out. He cannot, and he rolls on the ground like a toppled mountain. The arrow is called "burning" because it enters like fire and sears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟṟum, kaiyiṉai nilattoṭum; erip poṟi paṟappa
cuṟṟum nōkkuṟum; cuṭu caramtaṉait tuṇaik karattāl
paṟṟi, vāliṉum kāliṉum vali uṟap paṟippāṉ
uṟṟu, uṟāmaiyiṉ ulaivuṟum; malai eṉa uruḷum.