கம்பராமாயணம் 4101 · கிட்கிந்தா 7.79

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

மேருவை இறுப்போன் - மேரு மலையை முறிக்க வல்லவனும்; புகழோன் - புகழ் மிக்கவனும் ஆகிய வாலி; பறித்த வாளியை - (தன் மார்பினின்று) பிடுங்கிய அம்பை; பரு வலித் தடக்கையால் பற்றி - தனது பருத்த வலிமை வாய்ந்த பெரிய கைகளால் பிடித்து; இறுப்பென் - 'ஒடிப்பேன்' என்று கொண்டு - என்று கருதி; எழுந்தனன் - எழுந்து; முறிப்பென் என்னினும் - 'இதனையான் முறிப்பேன் என்று முயன்றாலும்; முறிவது அன்றுஆம் - (இது) முறியக்கூடிய எளிமையுடையது அன்றாம்' என மொழியா - என்று சொல்லி; பொறித்த நாமத்தை - அந்த அம்பில் அடையாளமாக எழுதப்பட்டுள்ள பெயரை; அறிகுவான் நோக்கினன் - அறியும் பொருட்டுக் கூர்ந்து பார்த்தான்.

'மேருவை இறுப்போன்' என்றது வாலியின் வலிமையைக் காட்டியது. புகழோன் - வீரத்தால் புகழ் வாய்ந்தவன். இராம நாமத்தை நோக்கும் பேறு பெற்றவன். இராமனால் உயிர் இழக்கும் பேறு பெற்றவன் என்ற காரணங்களால் 'புகழோன்' எனக் குறிக்கப் பெற்றான் எனினும் பொருந்தும். அறிகுவான் - வானீற்று வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Gripping in his huge, strong, broad hand the arrow he had pulled out,
  2. he rose, meaning to break it, he who could break Mount Mēru;
  3. saying, "Even if I try to snap it, it will not snap,"
  4. the famous one looked closely to learn the name engraved on it.

What the poem says

Vālī, strong enough to break Mount Mēru, gets up meaning to snap the arrow, but realises it will not break. So he examines it for the name of its owner.

He is called "the famous one" for his valour, and also, the commentators say, because he is fortunate: he is about to see Irāmaṉ's name and to die by Irāmaṉ's hand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟitta vāḷiyaip paru valit taṭak kaiyāl paṟṟi,
'iṟuppeṉ ' eṉṟu koṇṭu eḻuntaṉaṉ, mēruvai iṟuppōṉ;
'muṟippeṉ eṉṉiṉum muṟivatu aṉṟu ām ' eṉa moḻiyā,
poṟitta nāmattai aṟikuvāṉ nōkkiṉaṉ, pukaḻōṉ.