கம்பராமாயணம் 4108 · கிட்கிந்தா 7.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குலம் இது - நீ பிறந்த குலமோ (வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்பும் அரசர்கள் ஆண்ட) இத்தகைய பெருமை வாய்ந்தது; கல்வி ஈது - நீ கற்ற கல்வி (உயர்ந்தோர் மாட்டுக்கற்று அறியாரையும் அறிவுறுத்திப் பயனளிக்கும்) இத்தன்மை உடையது; கொற்றம் ஈது - உன்னுடைய வெற்றியோ (கானகத்தில் அரக்கர்களை வென்ற) இத்தகைய சிறப்புடைத்து; உற்று நின்ற நலம் இது - உன்னை வந்தடைந்த நற்பண்புகளின் இயல்போ (துன்பம் அகற்றி இன்புறுத்தும்) இவ்வியல்பானது; புவனம் மூன்றின் நாயகம் - மூவுலகங்களையும் ஆட்சி செய்யும் தலைமை; உன்னது அன்றோ - உன்னுடையதல்லவா? வலம் இது - உன் பேராற்றல் இத்தகைத்து; இவ் வுலகம் தாங்கும் வண்மை ஈது - இந்த உலகத்தைப் பாதுகாக்கும் வள்ளன்மை இது; என்றால் - என்று உன்னைச் சிறப்பித்து உலகம் சொல்வதானால்; அறிந்திருந்து அயர்ந்துளார்போல் - எல்லாவற்றையும் அறிந்திருந்தும் மதிமயங்கி மறந்தவர் போல; திண்மை அலமரச் செய்யலாமோ - மேற்கூறிய உறுதிகள் யாவும் நிலைகலங்குமாறு தகுதியில்லாதனவற்றைச் செய்யலாமோ?
குலம், கல்வி, கொற்றம், நாயகம், வலம், வண்மை ஆகிய எல்லாச் சிறப்புக்களைப் பெற்றிருந்தும் அவற்றைக் காக்க மறந்தவன் போல மயங்கி நடந்து கொண்டாயே என வாலி கூறினன்.
குலம் இது - சூரிய குலம், இட்சுவாகு குலம், இரகு குலம் என உலகம் பாராட்டும் பெருமை உடையது. கடல் தோண்டினோர் கங்கையைக் கொணர்ந்தோர் எனச் சிறந்த அரசர்கள் ஆட்சி புரிந்த சிறப்பு உடைத்து. கல்வி ஈது - வசிட்டர் விசுவாமித்திரர் முதலியோர்பால் பெற்ற கல்வி; கொற்றம் ஈது - பதினாலாயிரக் கணக்கான கரதூடணாதியரைத் தனித்து வென்ற சிறப்புக் கொண்டது. உற்று நின்ற நலம் இது - 'குணங்களால் உயர்ந்த வள்ளல்' (479), 'அந்த மில் பெருங்குணத்து இராமன்' (2159) என்ற அடிகளால் அறியலாம். புவனம் மூன்றின் நாயகம் - விண், மண், பாதாளம் ஆகிய உலகின் நாயகன் இராமன் என்பதை வாலி அறிந்திருந்தான். வலம் இது - எதையும் எதிர்க்கும் பேராற்றல். உலகம் தாங்கும் வண்மை ஈது - அருளால் உலகச் சுமையை ஏற்றுக்கொள்ளும் வள்ளல் தன்மை.
திண்மை அலமரச் செய்யலாமோ என்பதற்கு உன்பால் நான் கொண்ட வலிய நம்பிக்கைகள் சிதையத் தகுதியல்லனவற்றைச் செய்யலாமோ எனவும் பொருள் கொள்ளலாம். ஈது - இது என்பது நீண்டது, செய்யுள்விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Your lineage is this; your learning is this; your victory is this; the goodness
- that has come to rest in you is this; is not the lordship of the three worlds yours?
- Your strength is this; your generosity that sustains this world is this; and so,
- should you shake all that firmness, like one who knows and yet forgets?"
What the poem says
Vālī lists everything that should have stopped Irāmaṉ: a famous dynasty, the Solar line of Ikṣvāku and Raghu; an education under Vaciṭṭar and Vicuvāmittiraṉ; victories such as killing fourteen thousand demons alone; noble qualities; lordship of the three worlds; immense strength; and generosity that carries the world.
With all this, how could he act like a man who knows the right and forgets it? The last line can also mean: how could you shatter the firm trust I placed in you?