கம்பராமாயணம் 4111 · கிட்கிந்தா 7.89

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர்தரு குரங்கின் மாடே
கலியது காலம் வந்து பரந்ததோ ? கருணை வள்ளால் !
மெலியவர் பாலதேயோ , ஒழுக்கமும் , விழுப்பம் தானும் ?
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசை இன்று ஆமோ ? '

பொருள் · Meaning in Tamil

கருணை வள்ளால்! - அருள் நிறைந்த வள்ளலே! ஒலி கடல் உலகம் தன்னில் - ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில்; ஊர்தரு குரங்கின் மாடே - தாவித் திரியும் குரங்குகளிடத்துமட்டும்; கலியது காலம் வந்து கலந்ததோ - கலியினுடைய தீய காலம் வந்து கலந்துவிட்டதோ? ஒழுக்கம் விழுப்பம் தானும் - நல்லொழுக்கமும் அதனால் பெறத்தகும் சிறப்பும்; மெலியவர் பாலதேயோ - வலிமை குறைந்தவர்களிடம் மட்டும் இருக்க வேண்டியனவோ? வலியவர் மெலிவு செய்தால் - வலிமையுடையவர்கள் இழி தொழிலைச் செய்வாராயின்; புகழ் அன்றி வசையும் உண்டோ - (அதனால்) அவர்களுக்குப் புகழ் ஏற்படுவதன்றிப் பழி ஏற்படுதலும் உண்டோ?

ஊர்தரு குரங்கு - மரங்களிலும் மலைகளிலும் தாவித் திரிகின்ற குரங்கு. கலியது காலம் - கலிபுருடன் காலம்; அறத்திற்கு மாறான தீய செயல்கள் ஓங்கி நிற்கும் காலம். இராமன் கதை திரேதாயுகத்தில் நடந்தது. அங்ஙனமிருக்கத் தீமைகள் நடைபெறும் கலியுகம் எங்ஙனம் வந்து சேர்ந்தது? எவ்வளவோ வலிமை உடைய உயிரினங்கள் இருக்க, எளிய குரங்கினமான தன்னிடம் மட்டும் இத்தகைய அறமற்ற செயல் அருளுடைய இராமனால் நிகழ்ந்து விட்டதே என்று வருந்தியவனாய் 'ஊர்தரு குரங்கின் மாடே கலியது காலம் வந்து கலந்ததோ' என்றான். அறமானது கிருதயுகத்தில் நான்கு பாதமும், திரேதாயுகத்தில் மூன்று பாதமும், துவாபர யுகத்தில் இரண்டு பாதமும், கலியுகத்தில் ஒரு பாதமும் ஆக நிகழ்ந்தது, அதன் முடிவில் அறம் குறைந்து தீமை பெருகும் என்பர்.

கருணை வள்ளால் - வஞ்சப்புகழ்ச்சி, 'நின் கருணையும் வள்ளன்மையும் இங்ஙனம் முடிந்ததோ' என ஏசுவானாய் அங்ஙனம் விளித்தான். வள்ளால் - வள்ளல் என்ற சொல்லின் விளி; ஈற்றயல் நீண்டது. ஒழுக்கமும் விழுப்பமும் வலியவர் மெலியவர் என்ற வேறுபாடின்றிக் கடைபிடிக்கத் தக்கனவாதலின் வாலி ஏளனமாக 'மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும்' என்றான். மெலியவர் - அறிவு, ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றில் குறைபாடு உடையவர் - அவற்றில் மிக்கவர் வலியவர். ஒழுக்கமும் விழுப்பந்தானும் - மெலியவர் பாலதேயோ - பன்மை ஒருமையில் முடிந்தது. பன்மை ஒருமை மயக்கம்.

'வலியவர் தவறு செய்தாலும் அவர்க்குப் பழி வராது புகழ் வருகின்றதே, இதென்ன அநீதி' என்ற பொருளில் 'வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ?' என்றான். 'வல்லான் வகுத்ததே வாயக்கால்' என்ற பழமொழி இங்கு நினையத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "In this world ringed by the roaring sea, has the age of Kali come
  2. and settled only on the leaping monkeys? O generous lord of compassion!
  3. Do good conduct and honour belong only to the weak?
  4. When the strong do something low, does it earn them anything but praise, never blame?"

What the poem says

Vālī asks bitterly whether the evil age of Kali, when dharma is at its weakest, has arrived early just for the monkeys. Irāmaṉ's story belongs to the earlier Trētā age, when dharma still stood on three of its four feet.

He calls Irāmaṉ "generous lord of compassion" in irony. Then he makes his sharpest point: must only the weak keep the rules? When the mighty do wrong, the world still praises them. The thought matches the proverb that the irrigation channel runs wherever the strong man digs it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oli kaṭal ulakamtaṉṉil ūrtaru kuraṅkiṉmāṭē
kaliyatu kālam vantu kalantatō? karuṇai vaḷḷāl!
meliyavar pālatēyō, oḻukkamum, viḻuppamtāṉum?
valiyavar melivu ceytāl pukaḻ aṉṟi vacaiyum uṇṭō? '