கம்பராமாயணம் 4117 · கிட்கிந்தா 7.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செயலைச் செற்ற - (உங்கள்) பாதுகாவலை அழித்த; பகை - பகைவனான இராவணனை; தெறுவான் தெரிந்து - அழிக்கும் பொருட்டு ஆராய்ந்து; அயலைப் பற்றி - வேறொருவனைச் (சுக்கிரீவனைச்) சார்ந்து; துணை அமைந்தாய் எனின் - துணைவனான அவனைச் சேர்த்துக் கொண்டாய் என்றால்; புயலைப் பற்றும் - (அச்செயல்) மேகம் போன்ற யானையைப் பிடித்துக் கொல்ல வல்ல; அப்பொங்கு அரி போக்கி - அத்தகைய சினந்து எழும் சிங்கத்தைத் துணையாக்கிக் கொள்வதை விட்டு; ஓர் முயலைப் பற்றுவது - ஒரு முயலைத் துணையாகக் கொள்வது; என்ன முயற்சியோ - என்ன முயற்சியாகும்?
செயலைச் செற்ற செயல் - காவலை அழித்து மாரீசனாகிய மாயமானைக் கொண்டு சீதையைக் கவர்ந்து சென்றது. பகை - இராவணன். அயல் - அயலான்; சுக்கிரீவன். இராவணனை எளிதில் வெல்ல வல்ல தன்னைத் துணையாக்கிக் கொள்ளாது, ஆற்றலில் குறைந்த சுக்கிரீவனைத் துணைவனாகக் கொண்டது யானையை அழிக்க, அதனை எளிதில் வெல்ல வல்ல சினம் மிக்க சிங்கத்தைத் துணைக் கொள்வதை விடுத்து எளிய முயலைத் துணைக் கொள்வது போலப் பயனில்லாத முயற்சியாகும் என வாலி கருதினான். புயல் - உவமை ஆகுபெயர். புயலைப் பற்றும் அப்பொங்கு அரி - விசையுடன் எழுந்து வானளாவப் பாய்ந்து மேகத்தைப் பிடிக்கும் கோபத்தோடு கூடிய அப்படிப்பட்ட சிங்கம் என்றும் பொருள் கொள்வர். தெறுவான் - வான் ஈற்றுவினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If, having thought how to destroy the foe who ruined what you guarded,
- you sought out an outsider and took him as your ally,
- then to pass over that fierce lion who seizes even the storm cloud and take
- a hare instead: what kind of effort is that?"
What the poem says
Vālī turns to tactics. Irāvaṇaṉ broke through Irāmaṉ's guard by sending Mārīcaṉ as a golden deer, and carried off Cītai. If Irāmaṉ needed an ally to defeat him, why choose the weak Cukkirīvaṉ over Vālī, who could have beaten Irāvaṇaṉ easily?
It is like hunting an elephant and choosing a hare as your partner instead of a lion. The "storm cloud" stands for the dark elephant, or literally for a lion leaping high enough to catch the clouds.