கம்பராமாயணம் 4119 · கிட்கிந்தா 7.97

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

மற்று ஒருத்தன் - (நினக்கு உறவினன் அல்லாத) அயலான் ஒருவனான சுக்கிரீவன்; வலிந்து அறை கூவ - வலிந்து வந்து என்னைப் போருக்கழைக்க; வந்து உற்ற என்னை - (அதனால்) அவனோடு போர் புரிய வந்த என்னை; ஒளித்து உயிர் உண்ட நீ - மறைந்திருந்து அம்பு செலுத்தி என் உயிரைக் கவர்ந்த நீ; இற்றையில் - இப்பொழுது; கிடந்த நிலத்து - (உயிர் நீங்கும் நிலையில் வீழ்ந்து) கிடக்கின்ற இப்போர்க் களத்தில்; பிறர்க்கும் இகல் ஏறு என - பிறர்க்கெல்லாம் வலிமை மிக்க ஆண் சிங்கம் போல; நிற்றி போலும் - நிற்கின்றாய் போலும்.

மற்றொருத்தன் - சுக்கிரீவன். துணையெனக் கொள்ளத் தகாத அயலான் என்பதால் 'மற்றொருத்தன்' எனக் கூறினான். தான் முற்பட்டுவந்து செய்த போர் அன்று; சுக்கிரீவன் வலிந்து வந்து அழைத்ததால் போரிட நேர்ந்தது என்பான் 'வலிந்து அறைகூவ வந்து உற்ற என்னை' என்றான். மறைந்திருந்து உயிரைக் கவர்ந்த செயலைச் செய்ததோடு வீரர் பலர்க்கு மேலாக இகல் ஏறு என நின்றனையே என இழித்துரைத்தான். வஞ்சித்துக் கொலை செய்த இராமன், வாலியின் முன்னின்று மறைவதற்குப் பதில், நாணமின்றி நின்றனன் என இராமனைக் கடிந்துரைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When another forced a challenge on me, I came
  2. and stood to fight, and you, from hiding, drank my life;
  3. and now, as though you were a conquering bull among others too,
  4. do you stand here on the ground where I lie?"

What the poem says

Vālī reminds Irāmaṉ that he did not start the fight; Cukkirīvaṉ, an outsider to Irāmaṉ, forced the challenge. Irāmaṉ killed him from hiding, and now, instead of keeping out of sight in shame, stands openly on the battlefield over the dying man as if he were the greatest of warriors.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟṟu oruttaṉ valintu aṟaikūva, vantu
uṟṟa eṉṉai, oḷittu, uyir uṇṭa nī,
iṟṟaiyil, piṟarkkum 'ikal ēṟu ' eṉa
niṟṟipōlum? kiṭanta nilattuarō. '