கம்பராமாயணம் 4131 · கிட்கிந்தா 7.109

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ” ''
- '

பொருள் · Meaning in Tamil

தெளிவு உடையோர்க்கு எலாம் - தெளிந்த நல்லறிவினையுடைய பெரியோர்க்கெல்லாம்; வலியம் எனா - யாம் வலிமையுடையோம் என்று கருதி; மனம் புறம் திறம்ப - மனம் அறத்திற்கு மாறான வழியில் சென்று; எளியவர்ப் பொங்குதல் - எளியவர் மீது சினம் கொள்ளுதல்; மறம் திறம்பல் - வீரத்தினின்று தவறுதலாகும்; அருங்கடி மங்கையர் - அரிய பாதுகாவலையுடைய மகளிரிடம்; திறம் திறம்பல் - கற்பு நிலைக்கு மாறாக நடந்து கொள்ளுதல்; அறம் திறம்பல் - அறநெறியிலிருந்து தவறுதலாகும்.

எளியவர் மீது சினம் கொள்ளாமையே உண்மையான மறம்; மகளிரிடம் தவறாக நடந்து கொள்ளாமை அறம் என உணர்த்தப்பட்டது. தப்பியோடிய தம்பியைத் துரத்திச் சென்று கொல்ல முயன்றதனாலும், அவன் மனைவியைக் கவர்ந்து கொண்டதாலும் தெளிவுடையோர் வெறுக்கத்தக்க மறம் திறம்பலும் அறம் திறம்பலுமாகிய குற்றங்களை வாலி செய்தான் என இராமன் உணர்த்தினான் என்க. (மனம்) புறம் திறம்ப மறம் திறம்பல், திறம் திறம்பல் அறம் திறம்பல் என அமைத்த தொடர் அமைப்பு நயமிக்கதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To swerve from valour is, thinking 'we are strong', to let the mind
  2. swerve outward and rage against the weak;
  3. to swerve from dharma is, toward women under close guard,
  4. to swerve from what is right: so it is for all who have clear understanding."

What the poem says

Irāmaṉ states two principles. For the wise, true valour fails when a man, proud of his strength, turns on those weaker than himself. Dharma fails when a man behaves wrongly toward women who belong to others.

Vālī did both: he hunted his fleeing brother and took his brother's wife. The verse plays on the word tiṟampu, "to swerve", which Vālī himself used against Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟam tiṟampal, ” valiyam '' eṉā, maṉam
puṟam tiṟampa, eḷiyavarp poṅkutal;
aṟam tiṟampal, aruṅ kaṭi maṅkaiyar
tiṟam tiṟampal; - teḷivu uṭaiyōrkku elām. '