கம்பராமாயணம் 4169 · கிட்கிந்தா 7.147

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

வைத்த பின் - (சுக்கிரீவனைச் சுற்றத்தோடு அடைக்கலமாக ஏற்குமாறு) கையினைத் தலைமேல் வைத்த பிறகு, தம்பி மாமுகம் நோக்கி - தம்பி சுக்கிரீவனது துயரத்தால் பொலிவிழந்த முகத்தைப் பார்த்து; உன்தன் ஓங்கு அரு மகனை - உன்னுடைய சிறந்த அரும்புதல்வனான அங்கதனை; வல்லை உய்த்தனை கொணர்தி - விரைவில் அழைத்துக் கொண்டுவருவாய்; என்ன - என்று கூறி; அத்தலை அவனை ஏவி அழைத்தலின் - (அங்கதன் இருந்த) அவ்விடத்திற்குச் சுக்கிரீவனை அனுப்பி அழைத்தமையால்; கைத்தலத்து உவரி நீரை - தன் கைகளால் கடலை; கலக்கினான் பயந்த காளை - கடைந்த வாலி பெற்ற மகனாகிய அங்கதன்; அணைந்தான் - அங்கு வந்து சேர்ந்தான்.

வாலியின் உடன்பிறப்பு ஆதலின் சுக்கிரீவன் 'உரிமைத் தம்பி' எனக் குறிக்கப் பெற்றான். 'உன்தன்மகன்' என்றது; தனக்கும் தம்பிக்கும் வேறுபாடு நீங்கியமையானும், இனிச் சுக்கிரீவனை அங்கதனைத் தன் மகனாகக் காக்க வேண்டிய கடமை பற்றியும் கூறியதாகும். உவரி நீர் என்பது உப்பு நீரையுடைய கடலைக் குறிப்பதெனினும், இங்கு வாலி கலக்கியது என்றதால், அது பாற்கடலைக் குறிக்கும். வாலி கடல் கடைந்ததைக் கவிச் சக்கரவர்த்தி (3955, 3957, 3960, 3961, 4085, 4100, 6997) பல பாடல்களில் கூறியுள்ளமை காண்க. காளை - உவமை ஆகுபெயர். என்ப - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After that, looking at the sorrowing face of his own brother: "Quickly
  2. go and bring here your noble and precious son," he said;
  3. and since he sent him there to call him, he came, they say,
  4. the young bull born of him who churned the salt sea with his hands.

What the poem says

Vāli asks Cukkirīvaṉ to fetch Aṅkataṉ, his son, and pointedly calls him "your son": the brothers are no longer divided, and Cukkirīvaṉ must now protect the boy as his own.

Aṅkataṉ is described as the son of the one who churned the ocean with his bare hands. The poem repeatedly credits Vāli with churning the Ocean of Milk to bring forth the nectar of immortality, a feat the gods and demons together could not manage. "Young bull" is a standard epithet for a heroic young man.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaittapiṉ, urimait tampi mā mukam nōkki, 'vallai
uyttaṉai koṇarti, uṉtaṉ ōṅku aru makaṉai ' eṉṉa,
at talai avaṉai ēvi aḻaittaliṉ, aṇaintāṉ eṉpa;
kaittalattu uvari nīraik kalakkiṉāṉ payanta kāḷai.