கம்பராமாயணம் 4172 · கிட்கிந்தா 7.150

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

எந்தையே எந்தையே - (அங்கதன் தன் தந்தையை நோக்கி) என் தந்தையே! என் தந்தையே! இவ் எழுதிரை வளாகத்து - மேன்மேலும் எழுகின்ற அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில், யார்க்கும் சிந்தையால் செய்கையால் - எவர்க்கும் மனத்தாலும் செயலாலும்; ஓர் தீவினை செய்திலாதாய் - ஒரு தீய காரியத்தையும் செய்யாதவனே! நொந்தனை - (அங்ஙனமிருந்தும்) நீ இவ்வாறு துன்பம் அடைந்தாய்; அது தான் நிற்க - அஃது ஒரு புறம் இருக்க; நின் முகம் நோக்கி - உன் முகத்தைப் பார்த்து; கூற்றம் வந்ததே அன்றோ - (அஞ்சாமல்) யமனும் (உன் உயிர் கொள்ளுதல் பொருட்டு) வந்து விட்டான் அல்லவா? அஞ்சாது அதன் வலியைத் தீர்ப்பார் ஆர் - இனி அச்சம் கொள்ளாமல் கூற்றுவனின் வலிமையை அழிக்க வல்லார் வேறு யாருளர்? (ஒருவரும் இலர்).

எந்தையே என்னும் அடுக்கு அவலம் பற்றியது. எழுதிரை வளாகம் என்பதற்கு இந்த ஏழு கடல்கள் சூழ்ந்த நிலப்பரப்பில் எனவும் பொருள் கொள்ளலாம். எழுதிரை - எழுகின்ற திரை எனின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழியாய் கடலைக் குறிக்கும். எழுதிரை - ஏழு கடல்கள் எனப் பண்புத்தொகையாயின் 'திரை' சினையாகுபெயராய்க் கடலைக் குறிக்கும். வாலி தனக்குப் பகைவராயினாரை வருத்துவானேயன்றி, தானாகப் பிறர்க்குத் துன்பம் செய்வதைச் சிந்திப்பதும் செய்வதும் இலன் என்பதால் 'சிந்தையும் செய்கையும்' கூறப்பட்டதால் இனம் பற்றி 'மொழியும்' கொள்ளப்படவேண்டும். வாலி, சுக்கிரீவன் மீது பகைமை பாராட்டியதும், உருமையைக் கவர்ந்ததும் நீதியின் பாற்பட்ட செயலாகவே வாலியின் பக்கத்தில் கருதப்பட்டதால், அங்கதனும் அச்செயல்களைத் தவறு எனக் கருதிலன். அதனால் தன் தந்தை முக்கரணங்களாலும் தீங்கு செய்யாதவன் என எண்ணினான். 'கூற்றும் என் பெயர் சொலக்குலையும்' (3962) என வாலி கூறினானாக யமனும் நேர்நின்று உயிர்நீக்க வந்துவிட்டானே எனத் தந்தைக்கு நேரிட்ட எளிமை நிலை நோக்கி இரங்கினான். இனி யமனை வெல்வார் எவருமிலர் என்றதால் வாலியின் பெருவலி புலப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "My father! My father! In this world circled by rising waves, you who to no one
  2. ever did a single wrong, in thought or in deed!
  3. You have been struck down; let that be. Did not even Death
  4. come straight up to your face without fear? Who now will break its power?"

What the poem says

Aṅkataṉ begins his lament. The repeated "my father" expresses his grief. He believes his father never wronged anyone in thought or deed; from Vāli's side, the quarrel with Cukkirīvaṉ and the taking of Rumai were seen as just, so his son does not count them as wrongs.

Vāli once boasted that Death trembled at his name. Now Death has dared to come face to face with him, and Aṅkataṉ asks who is left to curb its power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'entaiyē! entaiyē! iv eḻu tirai vaḷākattu, yārkkum
cintaiyāl, ceykaiyāl, ōr tīviṉai ceytilātāy!
nontaṉai; atutāṉ niṟka, niṉ mukam nōkkik kūṟṟum
vantatē aṉṟō añcātu? ār ataṉ valiyait tīrppār? '