கம்பராமாயணம் 4176 · கிட்கிந்தா 7.154

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
- '
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயன பலவும் பன்னி , அழுங்கினன் புழுங்கி , நோக்கித்
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் ; செங்கண் வாலி ,
'நீ இனி அயர்வாய் அல்லை ' என்று , தன் நெஞ்சில் புல்லி ,
'நாயகன் இராமன் செய்த , - நல்வினைப் பயன் , இது ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

ஆயன பலவும் பன்னி - அவ்வாறாகிய பலவற்றையும் மீண்டும் மீண்டும் கூறி; புழுங்கி அழுங்கினன் - புலம்பி வருந்தியவனாய்; நோக்கி - (தன் தந்தையைப் பார்த்து); தீ உறு மெழுகின் - அனலில் பட்ட மெழுகினைப் போல; சிந்தை உருகினன்- நெஞ்சம் உருகி வருந்தினான். செங்கண் வாலி - (துன்பத்தால்) சிவந்த கண்களை உடைய வாலி; 'நீ இனி அயர்வாய் அல்லை - (தன் மகனை நோக்கி) இனி நீ வருந்துதல் வேண்டா! என்று - என்று கூறி; தன் நெஞ்சில் புல்லி - அவனைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு; 'நாயகன் இராமன் - எல்லா உயிர்கட்கும் தலைவனான இராமன்; செய்த இது - செய்ததான இச்செயல்; நல்வினைப் பயன் என்றான்- யான் முன் செய்த புண்ணியத்தின் பயனாகும்' என்றான்.

பன்னுதல் - பலமுறை கூறுதல். சிந்தை உருகியமைக்கு நெருப்பில் பட்ட மெழுகு உவமையாம். நாயகன் இராமன் என்பதில் இராமனின் தலைமை உணர்த்தப்பட்டது. 'பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப்பூமேல் சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும் வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன்' (6994) என அங்கதன் இராவணனுக்கு இராமனின் நாயகச் சிறப்பைக் கூறுவது காண்க. 'இராமன் எனக்குச் செய்த இச்செயல் தான் செய்த நல்வினைப் பயன்' என வாலி அங்கதனுக்கு அறிவுறுத்தி ஆறுதல் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Lamenting many such things, he wailed and burned with grief; as he looked,
  2. his heart melted like wax put to the fire. Red-eyed Vāli
  3. said, "You must not grieve now," and held him to his breast:
  4. "What our lord Irāmaṉ has done is the fruit of my good deeds," he said.

What the poem says

Aṅkataṉ pours out his grief, his heart melting like wax in a flame. Vāli, his eyes red with pain, hugs his son to his chest and comforts him.

He tells Aṅkataṉ not to see his death as a misfortune: what Irāmaṉ, lord of all beings, has done to him is the reward of merit Vāli earned in the past. The commentary recalls a later scene where Aṅkataṉ himself tells Irāvaṇaṉ that Irāmaṉ is lord of every being, of the earth, of Cītai, of the gods, of the Vedas and of fate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyaṉa palavum paṉṉi, aḻuṅkiṉaṉ puḻuṅki, nōkka
tī uṟu meḻukiṉ cintai urukiṉaṉ; ceṅ kaṇ vāli,
'nī iṉi ayarvāyallai ' eṉṟu, taṉ neñcil pulli,
'nāyakaṉ irāmaṉ ceyta, - nalviṉaip payaṉ, itu ' eṉṟāṉ.