கம்பராமாயணம் 4211 · கிட்கிந்தா 8.8

Section கிட்கிந்தா காண்டம் / 8. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வாய்மை சால் அறிவின் வாய்த்தமந்திர மாந்தரோடும்,
தீமை தீர் ஒழுக்கின் வந்ததிறத் தொழில் மறவரோடும்,
தூய்மை சால் புணர்ச்சி பேணித்துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மையோடு அணிமை இன்றித்தேவரின் தெரிய நிற்றி.'

பொருள் · Meaning in Tamil

வாய்மை சால் அறிவின் வாய்த்த - வாய்மை நிறைந்த அறிவுத் திறம் வாய்க்கப்பெற்ற; மந்திர மாந்தரோடும் - அமைச்சர் முதலிய அரசியல் அறிஞர்களோடும்; தீமைதீர் ஒழுக்கின் வந்த - குற்றமற்ற நல்லொழுக்க நெறியில் ஒழுகும்; திறத்தொழில் மறவரோடும் - வலிமைக்கேற்ற தொழில்களையுடை வீரர்களோடும், தூய்மை சால் புணர்ச்சி பேணி - தூய்மை பொருந்திய சேர்க்கையை (அவர்கள் பால்) விரும்பிச் செய்து; துகள் அறு தொழிலை ஆகி - குற்றமற்ற செயல்களைச் செய்பவனாகி, சேய்மையோடு அணிமை இன்றி - பிறரோடு மிகவும் விலகாமலும், மிகவும் நெருங்காமலும்; தேவரின் தெரிய நிற்றி - (பிறர் உன்னைத்) தேவர்கள் போலக் கருதும்படி நிற்பாயாக.

அமைச்சர் முதலாயினோர் அரசனை அணுகாது நெடுந்தொலைவில் இருத்தலும், மிக அணுகி நெருக்கமாக இருத்தலும் தவிர்க்க வேண்டுவன. மிக விலகினால் அரசனுக்குப் பயன்படாமலும், மிக நெருங்கினால் அரசன் தன்னை அவமதித்ததாக நினைக்கவும் கூடுமாதலாலும் அகலலும் அணுகலும் நீக்க வேண்டுவன ஆயின. 'மன்னர் என்பார் எரிஎனற்கு உரியார் என்றே எண்ணுதி. . .. சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ண வேண்டா' (4078) என வாலி சுக்கிரீவனுக்குக் கூறியதையும் 'அகலாது அணுகாது தீக்காய்வார்போல்க இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்' எனக் குறள் (691) குறிப்பதையும் காண்க. தேவரின் தெரிய நிற்றி - அரசன் பிறப்பால் நிலவுலகனே ஆயினும், அவன் செயலால் மக்கட்குத் தெய்வமாகக் கருதப்பட்டதால் தேவர்களைப் போலப் பிறர்க்கு நீ விளங்குவாய் என்றான். 'முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்' என்று குறளும் (388), 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' (திருவாய்மொழி - 4 - 8 -) என்று ஆழ்வார் பாசுரமும் கூறியமை காண்க. தகுதியல்லாத வழியால் நட்புக் கொள்ளலாகாது என்பதற்குத் 'தூய்மை சால் புணர்ச்சி பேணி' என்றான்.

'சேய்மையோடு அணிமை இன்றி' என்ற செய்தி வான்மீகத்தில் வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுகையில் 'யாருடனும் அதிக நட்புச் செய்யத்தக்கதன்று; நட்பு இல்லாமையும் செய்யத்தக்கதன்று; இரண்டும் பெரிய குற்றமாம். ஆகையால் இடை நிகராய் ஒழுகவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "With counsellors whose wisdom is rich in truth,
  2. and with skilled warriors whose conduct is free of evil,
  3. keep pure association, be one whose deeds are without fault,
  4. neither too distant nor too close, and stand out like the gods."

What the poem says

Irāmaṉ tells Cukkirīvaṉ to keep honest, wise ministers and upright warriors about him, to be faultless in his deeds, and to keep a measured distance from his subjects, neither aloof nor over-familiar. Then his people will look up to him as to a god.

The commentary compares Vāli's earlier advice that a king is like fire, and the Tirukkuṟaḷ (388), which says a king who rules justly will be regarded as a god by his people. In Vālmīki, Vāli gives Aṅgada similar advice about the middle course in friendship.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāymai cāl aṟiviṉ vāytta mantira māntarōṭum,
tīmai tīr oḻukkiṉ vanta tiṟat toḻil maṟavarōṭum,
tūymai cāl puṇarcci pēṇit tukaḷ aṟu toḻilai āka
cēymaiyōṭu aṇimai iṉṟit tēvariṉ teriya niṟṟi.'