கம்பராமாயணம் 4236 · கிட்கிந்தா 8.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வள அரசு எய்தி - எல்லா வளங்களும் பொருந்திய அரசாட்சியை அடைந்து; மற்றை வானர வீரர் யாரும் - மற்ற வானர வீரர்கள் யாவரும்; கிளைஞரின் உதவ - சுற்றத்தார் போல வேண்டுவன செய்ய; ஆணை கிளர் திசை அளப்ப - (தனது) அரச ஆணை விளங்குகின்ற திசைகளின் எல்லையை அளாவவும்; அளவு இல ஆற்றல் - அளவற்ற வலிமையும்; ஆண்மை அங்கதன் - வீரமும் உடைய அங்கதன்; கேளோடு - உறவினரோடு; அறம் கொள் செல்வத்து - அறவழியில் ஈட்டப்பட்ட செல்வத்தோடு; இளவரசு இயற்ற - இளவரசனாக ஆட்சி புரியுமாறு; ஏவி - கட்டளையிட்டு; இனிதினின் இருந்தான் - இனிமையாகக் கிட்கிந்தை நகரத்தில் வீற்றிருந்தான். இப்பால் - (அஃது அங்ஙனமாகவும்) இப்புறத்தில்.
சுக்கிரீவன் செய்தியை இவ்வாறு கூறி, மேல் இராமன் செய்தியைக் கூறுகின்றார். ஆதலின் வேறுபாடு தோன்ற 'இப்பால்' என்றார். ஆணை கிளர் திசை அளப்ப - தனது கட்டளை தடையின்றி எங்கும் செல்ல; கிளைஞரின் - இன் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளது. கேள் - அரசியல் சுற்றமும் உறவியல் சுற்றமும். இனிதினின் இருந்தான் - அங்கதன் இளவரசனாயிருந்து அரச காரியங்களைக் கவனித்து வரச் சுக்கிரீவன் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having gained the rich kingdom, with all the other monkey warriors
- helping him like kinsmen, and his command spreading to measure every quarter, with his kin,
- he bade Aṅkataṉ, of boundless strength and valour, with wealth rightly won,
- rule as crown prince, and he dwelt there in ease. Meanwhile, on this side,
What the poem says
Cukkirīvaṉ settles into his reign. The other monkey chiefs serve him like family, his authority reaches every direction, and he makes Vālī's son Aṅkataṉ the crown prince, so that he himself can live at ease while Aṅkataṉ handles the affairs of state.
The final word, "meanwhile", marks a turn in the narrative: having finished with Cukkirīvaṉ, the poet now goes back to Irāmaṉ, whose story continues in the next canto, on the rainy season.