கம்பராமாயணம் 4238 · கிட்கிந்தா 9.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓவியமே என - ஓவியத்தில் தீட்டிய உருவமே போல; ஒளிக் கவின் குலாம் - ஒளி பொருந்திய அழகுடன் விளங்கும்; தேவியை நாடிய - (தன் மனைவியான) சீதாதேவியைத் தேடும் பொருட்டு; முந்தி - (அனுமன் முதலிய வானரவீரர்களை) அனுப்புவதற்கு முன்னரே; வானவன் - தேவர்களுக்கெல்லாம் தேவனான இராமன்; தென்திசைக்கு ஏவிய - தெற்குத் திசை நோக்கி அனுப்பிய; தூது என - தூதுவன் என்னுமாறு; இரவி - கதிரவன்; மா இயல் வடதிசை நின்று - பெருமை பொருந்திய வடக்குத் திசையிலிருந்து; ஏகினான் - தென்திசை நோக்கிச் சென்றான்.
வடதிசையைப் பெரியதிசை மங்களத்திசை, புண்ணியத் திசை என்று கூறுவதால் 'மாஇயல் வடதிசை' என்றார். சூரியன் தென்திசையாக ஒதுங்கிச் செல்லுதலை தட்சிணாயனம் என்பர். ஆடிமாதம் முதல் மார்கழி ஈறாக உள்ள ஆறு மாதங்களும் இதன்கண் அடங்கும். இங்குக் கார்காலத்திற்குரிய தென்திசை அயனம் தொடங்கியது என்பதாம். தட்சிணாயனத்தில் இயல்பாகவே வடதிசையிலிருந்து தென்திசை செல்லும் சூரியனை, இராமன் தன் தேவியைத் தேடத் தென்திசைக்குத் தூது என ஏவினான் எனக்கூறியது தற்குறிப்பேற்ற அணியாகும். பின்னர் அனுமன் தென்திசை நோக்கிச் செல்வானாதலின், கதிரவன் முந்திச் சென்ற தூது போன்றவனானான்.
ஓவியமே என ஒளிக் கவின் குலாம் தேவி எனக் கூறும் கம்பர் 'அனங்க வேள் செய்த ஓவியம்' (5079) என்றும் 'மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை' (483) என்றும் பாராட்டுவர். ஓவியமே - ஏகாரம் தேற்றம்; குலவும் என்பது குலாம் எனக் குறைந்து நின்றது; நாடிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the great northern quarter, as though the god
- had sent ahead, to seek his queen who shines with radiant beauty
- like a very painting, a messenger to the southern quarter
- before all others, the sun went on its way.
What the poem says
The rainy-season canto opens. The sun begins its southward course, the half-year that brings the monsoon. The poet imagines this ordinary movement as a deliberate act: it is as if Irāmaṉ, the god, had sent the sun south ahead of everyone else as a messenger to look for Cītai, who is as lovely as a painted picture.
This is the figure of fancied cause, giving a natural event an invented purpose. It also looks ahead: later Aṉumaṉ will in fact go south as Irāmaṉ's envoy, so the sun is a forerunner of that mission.