கம்பராமாயணம் 4240 · கிட்கிந்தா 9.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நண்ணுதல் அருங்கடல் - நெருங்குதற்கு அரிய கடலில் தோன்றிய; நஞ்சம் நுங்கிய - நஞ்சை விழுங்கிய; கண்ணுதல் கண்டத்தின் - நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் கழுத்தின்; காட்சி ஆம் என - கரிய நிறக் காட்சி என்னுமாறு; விண்ணகம் இருண்டது - வானம் இருண்டது. வெயிலின் வெங்கதிர் - சூரியனுடைய வெம்மையான கதிர்கள்; தண்ணிய மெலிந்தன - குளிர்ந்தனவாய்த் தம் வலிமை குறைந்தன; மேகம் தழைத்த - கரிய மேகங்கள் நீர் மொண்டு பெருகிப் பரவின.
பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சின் கொடுமை தோன்ற 'நண்ணுதல் அருங்கடல் நஞ்சம்' என்றார் கண்ணுதல் - இலக்கணப்போலி, நெற்றிக் கண்ணை உடைய சிவபிரானைக் குறித்தலின் அன்மொழித் தொகையுமாம். அமுதம் வேண்டி அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைய, முதலில் வந்த நஞ்சைச் சிவபிரான் உண்டார் என்பது புராணக் கதையாகும். நஞ்சு கரிய நிறமுடையதாதலின் அதனை உண்ட சிவபிரான் கண்டமும் கரிய நிறமுடையதாயிற்று. 'நீலமணி மிடற்றன்' (புறம் - 91) என்பர் ஒளவையார். மெலிந்தன, தழைத்த - முரண் தொடை. சிவபிரான் கண்டத்தின் கருநிறம் போல் வானம் இருண்டது என்றது காட்சிஅணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the sight of the throat of the forehead-eyed god
- who swallowed the poison of the unapproachable sea,
- the heavens grew dark; the fierce rays of the sun
- grew cool and weak; the clouds swelled and spread.
What the poem says
The sky darkens with rain clouds until it looks like the throat of Śiva, the god with an eye in his forehead. When gods and demons churned the ocean of milk for nectar, a deadly poison came up first, and Śiva swallowed it to save the world. It stained his throat dark blue.
As the clouds thicken, the sun's harsh rays become cool and weak. The poet sets "grew weak" against "swelled" to contrast the fading sun with the growing clouds.