கம்பராமாயணம் 4264 · கிட்கிந்தா 9.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நால் நிறச் சுரும்பும் - பல நிறங்களை உடைய சுரும்புகளும்; வண்டும் - வண்டுகளும்; நவமணி அணியின் சார - நவமணிகள் இழைக்கப்பெற்ற வளையல், மோதிரம் முதலிய அணிகளைப் போல மொய்க்க; தேன் உக மலர்ந்த - தேன் ஒழுகும்படி மலர்ந்த; சந்தச் சேயிதழ் - அழகிய சிவந்த இதழ்களையுடைய; காந்தள் செம்பூ - செங்காந்தள் மலர்கள்; மா நிலக் கிழத்தி - பெரிய நிலமாகிய பெண்; வேனிலை வென்றது அம்மா கார் என - 'வேனிற்காலத்தை வென்று விட்டது கார்காலம் என்று; வியந்து நோக்கி - (கார் கால அழகை) வியந்து பார்த்து; மறித்தன கைகள் - அசைத்தனவாகிய கைகளை; போன்ற - ஒத்தன.
வண்டும், சுரும்பும் வெவ்வேறு இனம் ஆதலால் இரண்டாகக் கூறினார். 'சுரும்புகாள்! வண்டுகாள்! மகிழ்தேனினங்காள்' 'மது உண்டு தேக்கிடும் ஒண்மிஞிறீட்டங்காள்' (சீவக 892) என வண்டின் நால்வகை இனங்கள் சிந்தாமணியுள் சுட்டப்பட்டுள்ளன. காந்தளில் தேன் உண்ண மொய்க்கும் வண்டுகளின் தோற்றம் கையில் அணிந்துள்ள நவமணிகள் இழைக்கப்பெற்ற வளையல், மோதிரம் ஆகிய அணிகலன்களை ஒத்து விளங்கின. 'வளைகள் காந்தளின் பெய்தன அனைய கைம்மயிலே' (2074) எனக் கம்பரே உவமை கூறியிருத்தல் காண்க. காந்தள் மலரில் தும்பி மணிபோல் தோன்றுவதை 'அலங்கு குலைக் காந்தள் நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி, பாம்புமிழ் மணியின் தோன்றும்' (குறுந். 239) என்னும் அடிகள் உணர்த்தும். செங்காந்தள் கைக்கு உவமையாவதைக் 'காந்தள் நறுங்குலை அன்ன நலம் பெறு கையினள்' (ஐங்குறு-293), அலர்காந்தள் நுண்ணேர்தண் ஏருருவின் துடுப்பெனப் புரையுநின் திரண்ட நேர் அரி முன்கை (கலி-59) என்னும் இடங்களில் காண்க. வண்டினம் மொய்த்தலால் காந்தள் மலர் அசையும் தோற்றம், 'வேனிலை வென்றதம்மா கார்' என நிலமகள் வியந்து கையசைத்தது போல் இருந்தது என்பது தற்குறிப்பேற்ற அணியாகும். கையசைத்தல் வியப்பிற்கு அறிகுறி. மழையானது, முதுவேனிற் காலத்தில் உள்ள வெப்பம், வியர்வு, அசதி முதலியவற்றை ஒழித்தமையால் வேனிலைக் கார் வென்றது என்றார் பொதுவாக வேனிற்காலம் பருவங்களுள் சிறந்தது எனப் போற்றப்படுவதால் அதனை வென்ற செயல் 'அம்மா' என்று வியக்கும்படி ஆயிற்று. 'மறித்தன' என்பதற்குத் தடுத்தல் எனக் கொண்டு, வேனிற்காலத்தை இனி வேண்டா எனக் கைகளால் தடுத்தது போலிருந்தன என்றும் பொருள் கொள்வர் மன் ஓ ஈற்றசைகள், அம்மா - வியப்பிடைச் சொல்
ஆங்கிலம் · English translationAI
Translation
- With bees and beetles of many colours clustering like jewellery set with the nine gems,
- the red glory lilies with their lovely crimson petals, opened so that honey spilled,
- looked as if the lady of the great earth, gazing in wonder and saying
- "Ah, the rains have conquered summer!", were waving her hands.
What the poem says
The red kāntaḷ, the glory lily, opens with the rains. In Tamil poetry its flame-shaped flowers are a standard image for a woman's slender hand. Swarms of many-coloured bees cling to the blossoms like bangles and rings set with gems.
As the flowers sway under the bees, the poet imagines the Earth as a woman waving her jewelled hands in amazement and crying out that the rainy season has defeated the summer, ending its heat and weariness. Some read the gesture instead as her hands raised to wave summer away for good.