கம்பராமாயணம் 4266 · கிட்கிந்தா 9.29

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எள் இட இடனும் இன்றிஎழுந்தன இலங்கு கோபம்
தள்ளுறத், தலைவர், தம்மைப்பிரிந்தவர் தழுவத் தூமக்
கள் உடை ஓதியார்தம்கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பைசிதர்ந்து என, விரிந்த மாதோ.

பொருள் · Meaning in Tamil

எள் இட இடமும் இன்றி - ஓர் எள்ளைப் போடுதற்கும் இடம் இல்லாதபடி; எழுந்தன இலங்கு கோபம் - (மிக்கு) எழுந்தனவாகிய இந்திரகோபம் என்னும் பூச்சிகள்; தள்ளுற - (பிரிவாற்றாமையால்) தடுமாறும்படி; தம்மைப் பிரிந்தவர் தலைவர் - தம்மைப் பிரிந்தவர்களாகிய தலைவர்கள்; தழீஇய - (கார் காலத்தில் மீண்டு வந்து) தழுவ; தூமக் கள்ளுடை ஓதியார்தம் - வாசனைப்புகையூட்டப் பெற்றதும் (சூடிய மலர்களின் தேனையுடையதுமான கூந்தலையுடைய மகளிரொடு கொண்ட, கலவியில் - புணர்ச்சியின் முன்னர்; பல்கால் கான்ற - பல முறை உமிழ்ந்த; வெள்ளடைத் தம்பல் குப்பை - வெற்றிலைத் தம்பலங்களின் தொகுதிகள்; சிதர்ந்தென விரிந்த - சிந்திக் கிடந்தாற் போலப் பரந்து கிடந்தன.

எள் இட இடமும் என்றதால் தம்பலப் பூச்சிகளின் மிகுதி கூறப்பட்டது. கோபம் - இந்திர கோபம். இது செந்நிறமாதலின் தம்பலத்துக்கு உவமித்தார் தம்பல் - தம்பலம் என்பதன் கடைக்குறை. தூமம் அகில் முதலியவற்றின் புகை. இது கூந்தலுக்கு ஊட்டப் பெறுவது. "பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார் தண்ணறுந் தகரமுளரி நெருப்பமைத்து, இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப" (நெடுநல்-54-55) என்பது காண்க. பிரிவின்கண் அணி செய்யப்பெறாதிருந்த கூந்தல் தலைவர் வருகையால் பூவும் புகையும் பெற்றுப் பொலிவெய்தினமை தோன்றத் "தூமக் கள்ளுடை ஓதியார்" என்றார் அன்புமிகுதியால் தழுவுந்தொறும் தம்பலம் மென்று உமிழ்ந்தமை தோன்றப் பல்கால் கான்ற என்றார். 'எள்ளிட இடமும் இன்றி' என்ற இடத்து இழிவு சிறப்பும்மை பிரித்துக் கூட்டப்பட்டது. மாது ஓ - ஈற்றசை உவமை அணி அமைந்த பாடல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Leaving not even room to drop a sesame seed, the bright red velvet insects rose up,
  2. spread out as though the lords who had been parted from them, returning to embrace
  3. women whose hair was smoked with incense and sweet with honey, so that they reeled,
  4. had scattered heaps of the betel quid spat out many times in their lovemaking.

What the poem says

After the rains the ground swarms with indirakōpam, small bright-red velvet mites, so thickly that there is no room even for a sesame seed. Their scarlet recalls chewed betel, which stains red.

The poet imagines them as the red betel quids spat out again and again by reunited lovers: husbands just home for the rainy season, embracing wives who have dressed their hair again with flowers and perfumed smoke after leaving it plain while they were alone. The image is the reverse of Irāmaṉ's loneliness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḷ iṭa iṭamum iṉṟi eḻuntaṉa ilaṅku kōpam
taḷḷuṟa, talaivar, tammaip pirintavar taḻīiya tūmak
kaḷḷuṭai ōtiyār tam kalaviyil, palakāl kāṉṟa
veḷḷaṭait tampal kuppai citarnteṉa, virinta mātō.