கம்பராமாயணம் 4273 · கிட்கிந்தா 9.36

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேரில் நல் நெடுந் திசை செலச்செருக்கு அழிந்து ஒடுங்கும்
கூர் எயிற்றியர் கண் எனக்குவிந்தன குவளை,
மாரன் அன்னவர் வரவு கண்டுஉவக்கின்ற மகளிர்
மூரல் மென்குறு முறுவல் ஒத்துஅரும்பின, முல்லை.

பொருள் · Meaning in Tamil

தேரில் நல்நெடுந்திசை செல - (தன்னைப் பிரிந்த தலைவன்) தேரில் ஏறிப் (பொருளீட்ட) நல்லதாகிய நெடுந்தூரம் செல்ல; செருக்கு அழிந்து ஒடுங்கும் - (பிரிவுத் துன்பத்தால்) மகிழ்ச்சி நீங்கி ஒடுங்கும் (தலைவியின்); கூர் அயில் தரும் கண் என - கூர்மையான வேல் போன்ற கண்களைப் போல; குவளை குவிந்தன - கருங்குவளை மலர்கள் இதழ் குவிந்தன. மாரன் அன்னவர் வரவு கண்டு - மன்மதனை ஒத்த தம் தலைவர் மீண்டு வருதலைப் பார்த்து; உவக்கின்ற மகளிர் - மகிழ்கின்ற மகளிரின்; மென் குறு முறுவல் மூரல் ஒத்து - மெல்லிய புன்சிரிப்பில் தோன்றும் பற்களைப்போல; முல்லை அரும்பின - முல்லைக் கொடிகள் அரும்பின.

பிரிந்த மகளிர் விழிகள் போலக் கருங்குவளை குவிய, தலைவர் வரவு கண்டு மகிழ்ந்த மகளிர் புன்முறுவலொத்து முல்லைகள் அரும்பின. உவமை அணி. நிறமும் வடிவும் பற்றிக் கண்களுக்குக் கருங்குவளையும், பற்களுக்கு முல்லை அரும்பும் உவமை ஆயின. துன்பத்தால் கண்கள் மலர்ச்சியின்றி இடுங்குதல் இயல்பு. ஆடவர்க்குத் துன்பம் விளைத்தலால் 'கூர் அயில் தரும் கண்' என்றார். தரும் - உவம உருபு. கார்காலத்தில் குவளை குவிதலும் முல்லை அரும்பலும் இயல்பாகும். 'கோடல்கள் பெருமை கூர, குவலயம் சிறுமை கூர' (4173); என முன்னர் வந்தமை காண்க. பற்கள் சிறிது தோன்ற முறுவலிக்கும். மகளிர் இயல்பு தோன்ற 'மென் குறு முறுவல்' என்றார். 'கண்கள் போன்றன குவளைகள், பற்கள் போன்றன முல்லை அரும்புகள்' என்று வழக்கிலுள்ள உவமைகளை மாற்றிக் கூறியதால் எதிர்நிலை அணியாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the sharp spear-like eyes of women whose pride is broken and who shrink into themselves
  2. when their men go off in chariots to far and distant lands, the blue water lilies closed;
  3. like the soft, small smiles that bare the teeth of women who rejoice
  4. to see their men, handsome as Māraṉ, come home, the jasmine budded.

What the poem says

Two flowers of the rainy season, each matched with a woman. The dark blue kuvaḷai lilies close up, like the eyes of a wife who has lost all joy since her husband drove off to distant lands; her eyes, sharp as spears to men, now narrow in grief. The white jasmine buds appear, like the little teeth that show when a wife smiles at her husband's return, a man as handsome as Māraṉ, the love god.

Eyes like lilies and teeth like jasmine buds are stock comparisons; here the poet turns them round and compares the flowers to the eyes and teeth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēril nal neṭun ticai celac cerukku aḻintu oṭuṅkum
kūr ayil tarum kaṇ eṉak kuvintaṉa kuvaḷai,
māraṉ aṉṉavar varavu kaṇṭu uvakkiṉṟa makaḷir
mūral meṉ kuṟu muṟuval ottu arumpiṉa, mullai.