கம்பராமாயணம் 4277 · கிட்கிந்தா 9.40

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீடு நெஞ்சு உறு நேயத்தால்நெடிது உறப் பிரிந்து
வாடுகின்றன, மருள் உறுகாதலின் மயங்கிக்,
கூடு நல் நதித் தடம்தொறும்குடைந்தன, படிவுற்று
ஆடுகின்றன கொழுநரைப்பொருவின அன்னம்.

பொருள் · Meaning in Tamil

நெடிது உறப் பிரிந்து - (நதிகளை) நெடுநாட்களாகப் பிரிந்திருந்து; நெஞ்சு உறு நீடு நேயத்தால் - உள்ளத்தில் பொருந்திய மிக்க அன்பினால்; வாடுகின்ற - வாட்டம் அடைந்தனவாயிருந்து; மருளுறு காதலின் மயங்கி - (கார்காலம் வந்த அளவில்) மயக்கத்தைத் தரும் காதலோடு மயங்கி; கூடு நல் நதித்தடம் தொறும் - (தாம்) வந்து சேரப்பெற்ற சிறந்த நதிகளின் இடம்தோறும்; குடைந்தன - துளைந்து; படிவுற்று ஆடுகின்றன - நீராடி விளையாடுகின்றனவான; அன்னம் - அன்னப் பறவைகள்; கொழுநரைப் பொருவின - (தலைவியரைச் சேர்ந்த) கணவரைப் போன்றன.

கோடை காலத்தில் நீர் வற்றியதால் நீர்நிலைகளைப் பிரிந்து சென்றிருந்தது, கார் காலத்தில் அவற்றில் நீர் நிறைந்தமை உணர்ந்து வந்து அவற்றில் படிந்து குடைந்து ஆடும் அன்னங்கள், பல நாட்கள் பிரிந்து சென்றிருந்தது, கார் காலம் வந்த அளவில் திரும்பி வந்து காதலால் தலைவியரைத் தழுவி மகிழும் தலைவரைப் போன்றன. உவமை அணி. நீடு பிரிந்திருந்து வாடுதலும், கார்காலம் வந்தவுடன் மகிழ்ந்தாடுதலும் அன்னங்களுக்கும் தலைவர்க்கும் ஒத்தலின் 'கொழுநரைப் பொருவின அன்னம்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Long parted, they had pined with the deep love held in their hearts;
  2. now, dazed by bewildering desire,
  3. diving into every fine river they joined, sinking in
  4. and playing, the swans were like husbands come home.

What the poem says

During the dry season the swans had to leave the shrunken rivers and pools. Now the rains have filled them again, and the birds come back, dive in and play in the water.

The poet compares them to husbands who were away from their wives for a long time, pining all the while, and who now come home with the rains and embrace them in a daze of love. Both swans and husbands share the long absence, the pining and the joyful return.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṭu neñcu uṟu nēyattāl neṭitu uṟap pirintu
vāṭukiṉṟaṉa, maruḷuṟu kātaliṉ mayaṅka,
kūṭu nalnatit taṭamtoṟum kuṭaintaṉa, paṭivuṟṟu
āṭukiṉṟa koḻunaraip poruviṉa aṉṉam.