கம்பராமாயணம் 4283 · கிட்கிந்தா 9.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீயிர் - 'நீங்கள்; அன்னவள் குதலையிர் ஆதலின் - அந்தச் சீதையின் மழலை போன்ற இனிமையான குரலை உடையவர்களாதலால்; போய தையலை - (சூழ்ச்சியால்) என்னைப் பிரிந்த சீதையை; நேடித் தருதிர் என்று - தேடித் தருவீர்கள்' என்று; இராகவன் புகல - இராமன் (குயில்களை நோக்கிக்) கூற; குயில்கள் - அக்குயில்கள்; தேயம் எங்கணும் - (அதற்கு இணங்கி) எல்லா இடங்களிலும்; திரிந்தன போந்து - திரிந்து வந்து; இடைத் தேடி - அந்தந்த இடங்களில் அவளைத் தேடி, கூய ஆய் - உரக்கக் கூவி அழைத்தனவாய், குரல் குறைந்த போல - குரல் கம்மின போல; குறைந்தன - (கார்காலத்தில்) குரல் ஒடுங்கின.
கார் காலத்தில் குயில் கூவாமை இயல்பு. கார்காலத்தில் குயில் கூவாமை 'ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள்' (4173) என முன் கூறியதாலும் 'கருங்குயில் கையற மாமயில் ஆல' (கார். நாற். 16) என வருதலாலும் அறியலாம். குதலை - குழந்தைப் பருவத்திற்கே உரியதாயினும் மகளிர்க்கு எல்லாப் பருவத்திலும் பொருந்தியதாகக் கூறுதல் கவிஞர் இயல்பு. பறவையிடம் பேசுவதாகக் கூறுவது கவிமரபாகும். குயில்கள் குயில் மொழியாளைத் தேடின என்றதன் நயம் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You have the same sweet prattling voice as she; so search
- and bring back the lady who is gone," Irākavaṉ said to them,
- and roaming over every land, searching everywhere between,
- calling and calling, as though their voices had worn out, the cuckoos fell silent.
What the poem says
The koels, the Indian cuckoos, sing in spring and fall quiet in the rains. The poet explains their silence. Irāmaṉ had asked them to find Cītai, since their sweet voices are like hers. They flew all over the land calling for her until they shouted themselves hoarse, and so now they make no sound.
Speaking to birds was an accepted convention for a grieving lover, and there is a neat touch in cuckoos searching for a woman whose voice is like a cuckoo's.