கம்பராமாயணம் 4285 · கிட்கிந்தா 9.48

Section கிட்கிந்தா காண்டம் / 9. கார்காலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடிச்சியர் வடிக்குழல் - குறிஞ்சி நிலத்துக் குறத்தியரின் திருத்தப்பட்ட கூந்தல்; வேங்கை நாறின - வேங்கை மலர்களின் மணம் கமழப் பெற்றன. நுளைச்சியர் ஐம்பால் - நெய்தல் நிலத்தில் வாழும் நுளைச்சியரின் ஐந்து வகையாகப் பிரித்துப் போடப்படும் கூந்தல்; விரை வண்டு ஏங்க - விரைந்து வரும் இயல்பினதாகிய வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க; நாகமும் நாறின - சுரபுன்னை மலர்களின் மணம் வீசின. ஞாங்கர் - பக்கத்தில்; உழத்தியர் பித்திகை - மருதநிலத்து உழவப்பெண்களின் கூந்தல்; உற்பலம் நாற - செங்கழுநீர் மலர்களால் மணத்தைப் பரப்ப; ஆய்ச்சியர் ஓதி - முல்லை நிலத்து ஆய்ச்சியரின் கூந்தல்; ஓங்கு நாள் முல்லை நாறின - சிறந்த அன்றலர்ந்த முல்லை மலர்களால் மணம் கமழ்ந்தன.

கிட்கிந்தை மலை நானில வளம் மிக்கது என்பதைக் காட்ட, நானிலக் கருப்பொருள்களான வேங்கை, சுரபுன்னை, முல்லை, செங்கழுநீர் மலர்களைக் கூறினார். கொடிச்சியர் நுளைச்சியர் ஆய்ச்சியர், உழத்தியர் என்போர் நானில மகளிராவர். குழல், ஐம்பால், ஓதி, பித்திகை என்பன கூந்தல் என்ற ஒரு பொருளைக் குறித்த சொற்கள். 'நாறின' என்ற சொல் செய்யுளில் நான்கிடத்தும் ஒரே பொருளில் வந்தமையால் சொற்பொருள் பின்வரு நிலை அணியாம். வேங்கை, நாகம், முல்லை, உற்பலம் என்பன முதலாகு பெயராய் மலர்களைக் குறித்தன. வடிக்குழல் - திருத்தம் செய்யப்பட்ட கூந்தல், வாரி முடித்த கூந்தல் என்பதாம். ஐம்பால் - ஐந்து பகுப்புடையது. முடியை உச்சியில் முடித்தலாகிய முடியும், பக்கத்தில் முடித்தலாகிய கொண்டையும், பின்னே செருகுதலாகிய சுருளும், சுருட்டி முடித்தலாகிய குழலும், பின்னி விடுதலாகிய பனிச்சையுமாம். ஐம்பால் என்பதற்கு ஐந்து தன்மை உடையது என்றும் உரைப்பர். அவையாவன - மணம், மது, மென்மை, நெய்ப்பு, கருமை என்பன.

இப்பாடலுக்கு வேங்கை மலர்கள் கொடிச்சியர் கூந்தல் போல் மணம் வீசின, நாகம் நுளைச்சியர் ஐம்பால் போல் மணம் மிக்கன, முல்லை ஆய்ச்சியர் ஓதி போல நாறின. உற்பலம் உழத்தியர் கூந்தல் போல் மணம் வீசின எனவும் பொருள் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The well-dressed hair of the hill women smelt of vēṅkai blossom, while swift bees
  2. hummed over it; the braided hair of the fisherwomen smelt of the nākam flower;
  3. there the hair of the herdswomen smelt of fresh-opened jasmine;
  4. and close by, the hair of the farm women gave off the scent of the red water lily.

What the poem says

Classical Tamil poetry divides the land into regions, each with its own people and its own flowers. To show that the Kiṭkintai hills hold the wealth of all of them, the poet describes the women of four regions, each wearing her region's flower in her hair: the hill women wear vēṅkai, the women of the seashore wear nākam, the cowherd women wear jasmine, and the farm women of the river plains wear red water lilies.

The verb "smelt of" is repeated in all four lines. Another reading takes it the other way round: the flowers themselves smelt as sweet as each group of women's hair.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṅkai nāṟiṉa, koṭicciyar vaṭik kuḻal, virai vaṇṭu
ēṅka; nākamum nāṟiṉa, nuḷaicciyar aimpāl;
āṅku nāḷmullai nāṟiṉa āycciyar ōti;
ñāṅkar uṟpalam uḻattiyar pittikai nāṟa.