கம்பராமாயணம் 4288 · கிட்கிந்தா 9.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காவியும் கருங்குவளையும் - காவி மலரையும் கருங் குவளை மலரையும்; நெய்தலும் காயாம்பூவும் - நெய்தல் மலரையும் காயா மலரையும்; பொருவான் அவன் - (தன் உடல் நிறத்தால்) ஒத்தவனாகிய அந்த இராமன்; புலம்பினன் தளர்வான் - புலம்பித் தளர்ச்சி அடைபவனாய், ஆவியும் சிறிது உண்டு கொலாம் என - (இவன் உடம்பில்) சிறிதேனும் உயிர் உள்ளதோ என ஐயுறுமாறு; அயர்ந்தான் - சோர்வுற்றவனாகி; தூவி அன்னம் அன்னாள் திறத்து - மெல்லிய சிறகுகளை உடைய அன்னம் போன்ற சீதை மாட்டு; இவை இவை சொல்லும் - (தான் கொண்ட காதல் மிகுதியால்) இந்த இந்தச் சொற்களைச் சொல்பவனானான்.
காவி, கருங்குவளை, நெய்தல், காயாம்பூ மலர்கள் இராமன் நிறத்திற்கு உவமை. பல பொருள் உவமை அணி. காவி, கருங்குவளை, நெய்தல் என்பன ஆகுபெயராய் அவற்றின் மலர்களை உணர்த்தின. 'கடலோ? மழையோ? முழுநீலக் கல்லோ? காயா நறும்போதோ? படர்பூங்குவளை நாள் மலரோ? நீலோற்பலமோ, பானலோ? (544), 'எள்இல் பூவையும், இந்திர நீலமும் அள்ளல் வேலையும், அம்புத சாலமும், விள்ளும் வீயுடைப் பானலும், மேவும் மெய் வள்ளல். (569) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. தளர்ச்சியால் பேச்சு மூச்சற்றவனாய் இராமன் இறந்தவன் போலக் காணப்பட்டான் என்பதை 'ஆவியும் சிறிது உண்டு கொலாம் என அயர்ந்தான்' என்றார். கொல் - ஐயப் பொருளில் வந்தது. ஆகம் பூண்ட மெய் உயிரே நீ! அப்பொய் உயிர் போயே நின்ற ஆண்தகை! (5304) என்றதும் காண்க. அன்னம் நடையழகால் உவமை; சீதையின் பிரிவால் இராமன் அடையும் அவத்தைகளாகப் 'புலம்பல், தளர்தல், அயர்தல், மொழி பல கூறல் என்பன இங்கே கூறப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who matches the kāvi, the dark water lily, the neytal and the kāyā
- blossom in colour lamented and grew faint;
- he swooned so that one wondered, "Is there any life left in him at all?"
- and about her who was like a soft-plumed swan he spoke these words.
What the poem says
Irāmaṉ, whose body is the dark blue of the kāvi, kuvaḷai and neytal water lilies and the kāyā blossom, laments and collapses, lying so still that one might doubt he is alive.
The verse introduces a long lament that follows, in which he speaks of Cītai, as graceful in her walk as a swan. The commentary lists the stages of lovesickness shown here: lamenting, growing faint, swooning, and pouring out many words.