கம்பராமாயணம் 4294 · கிட்கிந்தா 9.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உயிரே - என் உயிரே; பயில் பாடக மெல்லடி - பொருந்திய பாடகம் என்னும் அணியை அணிந்த மெல்லிய பாதம்; பஞ்சு அனையார் - பஞ்சுபோல் மென்மையாய் இருக்கப் பெற்றவரும், செயிர் ஏதும் இலாரொடு - எந்த விதக் குற்றமும் இல்லாதவராகிய சீதையோடு; தீருதியோ - (நீயும்) என்னை விட்டு நீங்கிச் செல்வாயோ? அயிராது - (அங்ஙனம் செல்வதனால்) ஐயம் கொள்ளாமல்; உடனே அகல்வாய் அலையோ - அவருடன் சென்றிருப்பாய் அல்லையோ? கெடுவாய் - கேடு அடைந்ததையோ? உறவு ஓர்கிலையோ - எனக்கும், சீதைக்கும் உள்ள ஒன்றிய உறவை நீ அறியவில்லையோ?
பாடகம் - மகளிர்காலில் அணியும் ஒரு வகை அணி. இராவணனால் கவரப்படினும் மாசற்று இருந்தவராதலின் 'செயிர் - ஏதும் இலாரோடு' என்றான். 'எனக்கும் என் உயிராகிய சீதைக்கும் உள்ள உறவை நீ உணராயோ? அங்ஙனம் உணர்ந்திருப்பின், அவர் சென்றவன் நீ உடன் சென்றிருப்பாய்' எனக் கூறி, இராமன் புலம்பினான். கார்காலத்தில் சீதையைப் பிரிந்து வருந்தும் துயரத்தை விட, உயிர் பிரிதல் நல்லது எனத் துயரத்தின் மிகுதியை உயிர் மேல் வைத்துப் புலப்படுத்தியதாகும்.
இத்தகைய உயிர்த் தொடர்பைச் "செரு ஆர்தோள! நின் சிந்தை உளேன் எனின், மருவார் வெஞ்சரம் எனையும் வவ்வுமால், ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்; இருவேமுள் இருவேம் இருந்திலேம்" (4104) என்ற தாரை புலம்பலில் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Will you part from her, the blameless one whose soft feet, ringed with anklets,
- are like cotton? Should you not
- have gone with her at once, without a doubt?
- O my life, curse you! Do you not know our bond?"
What the poem says
In despair Irāmaṉ turns on his own life-breath. Cītai, soft-footed and wholly blameless even though Irāvaṇaṉ carried her off, was his life. So why did his life not leave his body and go with her the moment she was taken? Does it not understand how closely they are bound?
The verse expresses how unbearable the grief is: death would be easier than living through the rainy season apart from her. Tārai used the same idea when she mourned Vālī.