கம்பராமாயணம் 43 · பால 2.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வண்டு - (ஆண்) வண்டுகள்; பருவ மங்கையர் - இளம் பெண்களின்; பங்கய வாள் முகத்து - தாமரை போன்ற ஒளிகொண்ட முகத்தில் உள்ள; உருவ உண்கணை - அழகுடையனவும் மை இடப்பட்டனவுமாகிய கண்களை; ஒண் பெடை ஆம் எனக் கருதி - ஒளி கொண்ட பெண் வண்டுகள் என்று நினைத்து; அன்பொடு காமுற்று - அன்போடு விரும்பி; வைகலும் - நாளெல்லாம்; மருத வேலியின் வைகின - மருத நிலத்திலே தங்கின.
வண்டுகளைப் பெண்களின் கண்களுக்கு உவமை கூறுதல் மரபு; அந்த இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்டது இக் கற்பனை. பெண்களின் கண்கள் என்பது தெரியாமல் பெண் வண்டுகள் எனக் கருதி ஆண் வண்டுகள் நாளெல்லாம் காத்திருப்பதற்குக் காரணம் தக்க செவ்வி/தருணம் வாய்க்க வேண்டும் என்பதே. இலவு காத்த கிளி போல ஏமாறப் போவது தெரியாமல் மயங்கின. இது மயக்க அணி.
கணை - கண்ணை: தொகுத்தல் விகாரம்
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the bright lotus faces of young women
- the lovely, kohl-darkened eyes, taking them for gleaming mates,
- the bees, thinking so, longing for them with love, day after day
- lingered on in the farmland.
What the poem says
Poets traditionally compare women's dark, restless eyes to bees. Kampaṉ turns the comparison around. The male bees take the dark eyes in the lotus-like faces of young women for female bees, and fall in love with them. Day after day they hang about the farmland waiting for their chance, never realising they are like the proverbial parrot that waits for the silk-cotton pod to ripen and is cheated in the end. This is the figure of delusion, in which one thing is mistaken for another.