கம்பராமாயணம் 4329 · கிட்கிந்தா 9.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெய்அடை தீ எதிர்நிறுவி - நெய் ஊற்றி வளர்க்கப்பெற்ற தீ முன்னர் (சீதையை) நிறுத்தி; 'நிற்கு இவள் கையடை' என்ற - 'உனக்கு இவள் அடைக்கலப் பொருள்' என்று சொன்ன; அச்சனகன் கட்டுரை - அந்தச் சனகரது மொழியை; பொய் அடை ஆக்கிய - பொய்யொடு பொருந்திய சொற்களாகச் செய்துவிட்ட; பொறி இலேனொடு - நல்வினை இல்லாதவனாகிய என்னிடத்தில், மெய் அடையாது - உண்மை இருக்காது; இனி விளிதல் நன்று - (எனவே நான்) இனி இறத்தலே நல்லது.
ஓமத்தீ வளர்த்து, அத்தீ முன்னர்ச் சீதையை "உனது அடைக்கலப் பொருள்" எனக் கூறிச் சனகர் ஒப்படைத்ததை எண்ணி இராமன் கலங்கினான். "பூமகளும் பொருளும் என நீ என் மாமகள் தன்னொடும் மன்னுதி' என்னா, தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான்' என்பது கம்பர் கூற்று (1245). இங்ஙனம் ஒப்படைக்கப்பட்ட சீதையைக் கைப்பிடித்தான் இராமன் என்பதைத் 'தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்' (1248); 'பொற்றொடி கைக்கொடு நல்மனை க்ப்' (1251) என்ற அடிகள் உணர்த்தும். இதையே இராமன் இங்குக் 'கையடை' என்றனன். சீதையைப் பாதுகாவாது விட்டதால் சனகன் கூறிய கட்டுரை பொய்யாகுமாறு தான் நடந்து கொண்டதாகவும், அதனால் தன்னிடம் வாய்மை நிலைத்தல் இல்லை என்றும் கூறி 'இங்ஙனம் பொய்யனாய் வாழ்தலினும் இறத்தலே சிறந்தது' என்றான். கையடை - அடைக்கலம், தவறாமல் பாதுகாக்கத்தக்க பொருள் என்பது கருத்து. தம்மிடம் ஒப்படைத்ததைப் பாதுகாவாமல் விடுதல் பெரும்பாதகம் ஆதலின் 'பொறியிலேன்' என உரைத்தான். 'தாளினில் அடைந்தவர் தம்மை, தற்கு ஒரு கோள் உற, அஞ்சினன் கொடுத்த பேதையும்' (2203) நரகிடை வீழ்வன் என்ற பரதனின் சூளுரை அடைக்கலப் பொருளின் அருமையையும் அதனைக் காக்கத் தவறியவர் நரகடைவர் என்பதையும் உணர்த்தும். 'அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்' (சிலம்பு - 27 - 75) எனக் கூறி மாதிரி 'இடையிருள் யாமத்து எரியகம் புக்கது' காண்க. அரோ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Setting her before the fire fed with ghee, "She is
- given into your hands", said Caṉakaṉ; his solemn word
- I, a luckless man, have made a lie;
- truth will not stay with me; now it is better that I die.'
What the poem says
At the wedding, King Caṉakaṉ placed Cītai before the sacred fire and gave her into Irāmaṉ's keeping as a trust. Irāmaṉ now feels that by failing to protect her he has made his father-in-law's words false, and that truthfulness can no longer live in him.
In Tamil ethics, failing to guard what has been entrusted to you is a grave sin. The commentary recalls Paratan's oath that such a person falls into hell, and Mātari in the Cilappatikāram, who entered the fire after losing the woman placed in her care. For Irāmaṉ, death seems better than living as a man who broke a trust.